நானோ டெக்னாலஜி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் நானோ தொழில் நுட்பம் என்பது அறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டது. இருபத்தியோறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்உலகெங்கும் நானோ தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது.USING TECHNIC FROM THE
BOTTOM UP என்கிற அடிப்படைதான் நானோ தொழில்நுட்பம் என்பது. நானோ என்பது மிக மிகச் சிறிய அளவு. தூசி அளவை விடவும் சிறியது. இந்தச் சிறிய அளவு பொருளைக் கொண்டு ஒரு பொருளை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். மில்லி மீட்டர், சென்டி மீட்டர் என்பது போல், நானோ மீட்டர் என்பதும் அளவைக்குறிக்கும் சொல். நாம் வாழும் இந்த பூமியில் நாம் பயன்படுத்தும் எல்லாவித பொருட்களிலும்,
தாவரத்திலும், கல்வியிலும், மண்ணிலும் அணுக்களின் கூட்டமைப்புண்டு. அணுக்களின் கூட்டமைப்புதான் அந்த பொருளின் உருவம், எடை, நீள, அகலம், உயரம், அதன் தன்மை முதலியவற்றை தீர்மானிக்கிறது.இந்தஅணுக்கூட்டமைப்பை துல்லியமாக அறிந்து அதனை மாற்றியமைப்பதும்,அப்பொருள் முன்பிருந்த உருவிலிருந்து
சிறியதாக மாறினாலும் அதன் பயன்பாடு மட்டும் முன்னிலும் பன்மடங்கு கூடுதலாக்குவதும்
நானோ தொழில் நுட்பத்தின் சிறப்பு. சாலையில் ஊர்ந்து செல்லும் படகு போன்ற கார்கள் முன்பு இருந்தன. இன்று, பெரிய காரின் சொகுசான வசதியுடன், நல்ல வேகமான, அதே அளவு ஆட்கள் அமரக்கூடிய விதத்தில் பன்மடங்கு சிறிய ரக கார்கள் வந்துவிட்டன.
எரிபொருள் சிக்கனம், இடப்பற்றாக் குறை தவிர்ப்பு, எளிதான இயக்கம் என எல்லாமே முன்பை விட எளிதாகும் காரைப் போலவே நானோ தொழில் நுட்பத்தில் பல பொருட்கள் அதாவது முன்பு பயன்படுத்தியவற்றின் பெரிய அளவு மாறி அதே பயன் ஆனால் அளவில் சிறிதான வகையில் கச்சிதமான கட்டமைப்புடன்,
உறுதியாக, நீண்ட காலம் உழைக்கக் கூடிய வகையில், சுத்தமான வடிவமைப்பு - முன்பை விட கூடுதல் சுத்தமான வடிவமைப்பு, எனப்பல பண்புகளுடன் நானோ தொழில் நுட்பத்தால் பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இது தொடர்பாக பொறியியல் உயர் கல்வியில் நானோ தொழில் நுட்பம் சிறப்பாககற்பிக்கப்பட்டு வருகிறது.
1970களில் எரிக்ட்ரெஸ்லர் என்கிற அறிஞர் நானோ டெக்னாலஜி என்ற இலத்தீன் சொல்லை தன் கட்டுரை யொன்றில் பயன்படுத்தினார். அவர் தொடர்ந்து 1980 வரை ஆய்வு செய்து நானோ தொழில் நுட்பம் என்ற ஒன்றை அறிவியல் உலகுக்கு வழங்கினார்.
பின்னர் உலகெங்கும் இது தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், கருத்துக்கள் பலவாறாக வெளியானது. பின்னர் உலகின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள் , நானோ டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ற பிரிவை ஆய்வு நோக்கில் தொடங்கின.இன்று வீடுகளுக்கு அடிக்கும் பெயிண்ட் முதல் சமயலறை பாத்திரம், மின்சாதனப்பொருட்கள் வரை இந்த நுட்பத்திற்கு மாறி வருகின்றன.
தகவல் பரிமாற்றத்துறையில்
மேஜையளவு அகலமான கம்ப்யூட்டர்கள் மறைந்து கச்சிதமான மெல்லிய கம்ப்யூட்டர்கள் வந்து விட்டன.
மருத்துவத்துறையில், ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. போக்குவரத்து
வாகனங்கள் சாதனங்கள் வந்துகொண்டுள்ளன.
வேளாண்மையில் மாற்றம் கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
பொதுவாகவுள்ள எந்திரத் தொழில்களில் இந்த நுட்பம் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.
அணுக்களின் கூட்டமைப்பை தேவையான வகைக்கு மாற்றியமைத்தால்அதன் திறன் பன்மடங்கு கூடுவதுடன் அதன் அளவிலும், எடையிலும்மாற்றம் நிகழும் என்ற அடிப்படையில் அவ்வாறு நிகழும் மாற்றங்களை உரியவாறு ஆய்வு செய்து அப்பொருளின் பயன்பாட்டுத் தன்மையை அதிகரிக்கச்செய்யும் தொழில் நுட்பம் தான் நானோ தொழில் நுட்பம்.
கணிதத்திலும், இயல்பியலிலும்
சிறுவயது முதற் கொண்டேஆர்வத்தோடு படித்து வந்தால் +2 விற்குப்பிறகு பொறியியல் படித்து இந்தநுட்பத்தில் உயர்கல்வி பெற முடியும். நாளைய உலகம் நானோ பொறியியல் படித்தவர்கள் பின்னால் தான் போகவுள்ளது.
தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில் பட்ட மேற்படிப்பில்M.Sc., Nano Technology பாடப்பிரிவு கற்றுத் தரப்படுகிறது. நாளை உலகை ஆளப்போகும்துறைகளில் மிக முக்கியமான துறைதான் Nano Technology உங்கள் குழந்தைகளையும் தயார்படுத்துங்கள் .
எங்குபடிக்கலாம்?
SRM பல்கலைக்கழகம்
VIT பல்கலைக்கழகம்
சாஸ்திரா பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment