Thursday 31 May 2012

இணைய இதழியல் பயிற்சி..



இப்போது நீங்கள் உங்களது இருப்பிடங்களிளிருந்தேஇணைய ஊடகவியல் பயிற்சிபெறும் ஒரு அறிய வாய்ப்பை உங்களுக்கு தமிழ் . யுனிட்டி மீடியா நியூஸ் வழங்குகிறது. உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு கணணியும், இன்டர்நெட் இணைப்பும், ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சு செய்யும் திறனும், ஆர்வமும் தான்.
இந்த இணைய ஊடகவியல் பயிற்சியானது யுஎம்என் பத்திரிக்கையாளர்களின் பல்லாண்டுகலான திறமை, அனுபவம், அறிவு ஆகியவற்றின் சாரத்தை  நேரடியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் செய்தி துறை மற்றும் இனிய எழுத்து ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொண்டு தமிழ் இதழியலுக்கு எம்மாலான பங்கை ஆற்றுவதில் நாங்கள் பெரு நிறைவடைகிறோம் எனில் அது மிகையாகாது.
இணைய ஊடகவியல் என்பது அடிப்படையில் மக்களுக்கு  இடையேயான தொடர்பு  பற்றியதுதான். இந்த தொடர்பில் ஒரு முக்கிய அங்கத்தை மொழி வகிக்கிறது. எழுத்தோ, பேச்சோ எதுவானாலும் மொழியின்சிறப்பான பயன்பாட்டை வைத்தே தொடர்பு சிறப்பாக அமைய முடியும்.
எனவே தான்  எமது பயிற்சியில் மொழி பற்றிய அடிப்படை அறிவையும், திறனையும் எமது மாணாக்கர்களிடம் வளர்ப்பதே எமது முழு முதல் குறிகோளாக உள்ளது.
எமது இந்த நேரடி தொழிலனுபவத்துடன் கூடிய, ஊடகவியல் பயிற்சிக்கு பின்னர் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும் எனபதை தெரிவித்து கொள்கிறேன். இது தவிர எம்மோடு இணைந்து ஊடகவியலின் உள்ளர்த்தங்களை அறிய, பகிர மற்றும் திறனை வளர்த்து உன்னதமான செய்தியாளர்களாக உருவாக துடிக்கும் ஆர்வலர்களுக்கு, மிகச்சிறந்த அதிநவீன  தொழில்நுட்பரீதியான இணையதள பின்புலத்தை மேலாதிகமாக  வழங்க உள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த இணைய ஊடகவியல் பயிற்சியில் சேர விரும்புவர்கள் editor@unitymedianews.com என்னும் மின்னஞ்சைலோ அல்லது +91 -94455 

No comments:

Post a Comment