Thursday 31 May 2012

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற


வேலை தேடுவது என்பது கனிகள் நிறைந்த மாமரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போன்றது.
வேலை தேடும் வேலை!
சிலர் கண்ணை மூடிக் கொண்டு மரத்தில் கல்லெறிவர்(அனைத்து    வேலைகளுக்கும் விண்ணப்பிப்பது),
சிலர் அர்ச்சுனன் போல் குறி வைத்துத் தாக்குவர்(தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு மட்டும் விண்ணப்பிப்பது),
சிலர் மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு மாங்கனிகள் கிடைக்காதா என ஏங்குவர் ( மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பர்).
எது எப்படியோ!
வேலை வேண்டுமா வேலை!வேலை வாய்ப்புத் தேடலில் வெற்றி பெற இணையதளங்களின் பங்கு இன்றியமையாதது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்! முதலில்,

Naukri.com இணையதளம். என் நினைவறிந்த காலத்தில் இருந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டாவதாக,

Shine.com வலைத்தளம். வேலை வாய்ப்புத் தேடலுக்கான அனைத்து அம்சங்களுடன், இதன் மற்ற சிறப்பம்சங்கள் Career Advice மற்றும் Industry Information. வேலை தேடும் வேலையின் அடுத்த அங்கமான நேர்முகத்தேர்வுக்கு இந்த இரண்டு பிரிவுகளும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்றாவதாக,

Freshersworld.com இணையம். முற்றிலும் புதியவர்களுக்கானது. கல்லூரியில் இருந்து வெளியே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. வேலைவாய்ப்புத் தேடலின் முதல் மைல் கல்லான Written Test என்றாலே பலருக்கு அலர்ஜி. இதில் வெற்றி பெற வெவ்வேறு நிறுவனங்களின் Placement Papers இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக MBA, GATE, GRE போன்ற முதுகலைக் கல்லூரிப் படிப்புகளுக்குத் தயாராவதற்கான வளங்கள் கிடைக்கின்றன.
விஸ்வநாதன் வேலை வேண்டும்!
அடுத்ததாக

Careerage.com இணையத்தளம். உங்கள் Qualification மூலம் வேலை தேடும் சிறப்பு இதன் வெற்றிக்கான காரணம். மற்ற வேலை வாய்ப்பு தேடல் இயந்திரங்களின் குறையும் இதுவே. கல்லூரியில் படித்த படிப்பை தேர்வு செய்து வேலை தேடலாம் இந்த இணையத்தில்.
ஐந்தாவதாக,

fundoodatajobs.com 

தளம். நீங்கள் இத்தளத்தில் நேரடியாக நிறுவனங்களுக்கே உங்கள் Resume அனுப்ப முடியும். Apply Directly to Companies என்ற வாசகத்தை தாங்கி வரும் இந்த இணையம் உங்கள் வேலை வேட்டையில், வெற்றி பெற உதவும் என்பதில் சந்தேகமில்லை.
சரி, சரி,
”அரைக் காசு சம்பளமானாலும் அரசாங்க சம்பளம், கால் காசு சம்பளமானாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்” என்ற நோக்கம் கொண்டவரா நீங்கள்… அரசாங்க வேலையில் உள்ள காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகளை தரும் தளங்கள் இதோ…sarkarjobs.comமற்றும் http://sarkari-naukri.blogspot.com/
A to Z வேலை வாய்ப்புத் தளங்களின் தொகுப்பு:
http://jobsitesindia.com
உங்கள் வேலை தேடும் படலத்தில் வெற்றிச் செய்தியைப் பெற விழையும்,

1 comment:

  1. Worthy Information make much comfortable reading article as i suggest everybody to get updated in terms of Government Jobs Visit : Sarkari Naukri

    ReplyDelete