மின் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் அரசு தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தனியார் மின்சார தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.
குறிப்பாக இத்துறை சார்ந்த படிப்பில் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலாண்மை படிப்பை பொறுத்தவரை மத்திய அரசின் மின்சார துறையின் கீழ் அரியானாவில் இயங்கும் நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் (National Power Training Institute) வழங்கப்படுகிது.
எம்பிஏ-பவர் மேனேஜ்மென்ட்(MBA., Power Management) என்றழைக்கப்படும் 2 ஆண்டு கால இப்படிப்பில் சேர BE., அல்லது அதற்கு இணையான படிப்பில் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சிகிஜி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர் BE., படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இப்படிப்புக்கு சிகிஜி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்படிப்பில் சேர விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 (SC/ST பிரிவினருக்கு ரூ.500) செலுத்த வேண்டும். இதனை ‘National Power Training Institute, Faridabad’ என்ற பெயரில் பரிதாபாத்தில் மாற்றத் தக்க வகையில் DD எடுக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை www.npti.in, www.mdurohtak.ac.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டண DD, தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து வரும் பிப்.28ஆம் தேதிக்குள் Principal Director, (CAMPS), National Power Training Institute, NPTI Complex, Sector33, Faridabad- 121003, Haryana என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு பரிதாபாத்தில் உள்ள என்பிடிஅய் (NPTI) கல்வி நடுவத்தில் எதிர் வரும் ஏப்.3ஆம் தேதி நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும்.
No comments:
Post a Comment