Saturday, 19 May 2012

எம்.பி.ஏ


எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் வசதிக்கேற்ற பகுதியில் நல்ல, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலைக் கொண்டுள்ளனர்.  

முடிந்தளவிற்கு அருகாமையில், விரும்பும் கல்வி நிறுவனம் இருந்தால், பலருக்கும் சந்தோஷமே. எந்தெந்த பகுதிகளில், எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகிறோம். அதன்மூலம் மாணவர்கள் தங்களின் அலைச்சலைக் குறைத்து, போக்குவரத்தினால் ஏற்படும் பொருட்செலவையும் குறைக்கலாம். உறவுகளை பிரிவதையும் தவிர்க்கலாம்
தமிழ்நாடு: இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பெயர்பெற்ற எம்.பி.ஏ. நிறுவனங்கள் பல இருப்பது ஆச்சர்யமானதல்ல. தலைநகர் சென்னையானது, இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளைப் பெற்றுள்ள நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. மோட்டார் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் டெட்ராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே சென்னை மற்றும் தமிழகத்தின் வேறு சில பகுதிகளில் இருக்கும் எம்.பி.ஏ. படிப்பிற்கான பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களை பார்ப்போம். 
புகழ்பெற்ற சென்னை ஐ.ஐ.டி -இலுள்ள டிபார்ட்மென்ட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எம்.பி.ஏ. படிப்புகளுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று. இதைத்தவிர திருச்சியிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை எம்.பி.ஏ. படிப்பிற்கு சிறந்த நிறுவனங்கள். மேலும் சென்னையில் சர்வதேச அளவிலான தரத்துடன் மேலாண்மை படிப்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், குறுகிய காலத்தில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. 
இதைத்தவிர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் டிபார்ட்மென்ட் ஆப மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை எம்.பி.ஏ. படிப்புகளுக்கு பெயர்பெற்றவை. மேலும் சென்னையின் எஸ்.ஆர். எம். ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், சிவகாசியின் மெப்கோ, சேலத்திலுள்ள சோனா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட், மதுரையிலுள்ள தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை தமிழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களில் சிலவாகும்.

கேரளா:
இம்மாநிலத்தின் கோழிக்கோடு நகரில் ஐ.ஐ.எம். அமைந்துள்ளது. இதைத்தவிர அதே நகரிலுள்ள பரூக் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலையின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், கொச்சின் நகரிலுள்ள ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் போன்றவை மேலாண்மை படிப்பிற்கு பெயர்பெற்ற நிறுவனங்கள்.
டெல்லி:
டெல்லி மற்றும் என்.சி.ஆர்.(நேஷனல் கேபிடல் ரீஜன்) பகுதிகள் இணைந்து நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மேலாண்மை கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் ஏ.ஐ.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. டெல்லி பல்கலையின்கீழ் இயங்கும் நாட்டிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பேகல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எம்.பி.ஏ. படிப்பிற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் குர்கவானிலுள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் ஒரு பெயர்பெற்ற கல்வி நிறுவனம். இவைத்தவிர பிம்டெக், ஜி நொய்டா, எல்.பி.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவையும் முக்கியமானவை
ஆந்திரா: 
ஆந்திர தலைநகர் ஐதராபாத், பொதுவாகவே படிப்பிற்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கே மேலாண்மை படிப்பிற்காக பல சிறப்புவாய்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. பொது மேலாண்மை படிப்பில் தொடங்கி, வெளிநாட்டு வர்த்தகம், ஆபரேஷன்ஸ் மேலாண்மை மற்றும் எம்.பி.ஏ.(பயோடெக்னாலஜி) போன்ற சிறப்பு துறைகளுக்கான மேலாண்மை படிப்புகள் வரை படிப்பதற்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்(ஐ.எஸ்.பி), ஐ.சி.எப்.ஏ.ஐ. பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐ.பி.இ. போன்றவை அவற்றுள் சிலவாகும். மேலும் இம்மாநிலத்தில், பல்கலை இணைப்பு பெற்ற, சுயாட்சி அதிகாரம் உடைய, மேலாண்மை படிப்புக்கு பெயர்பெற்ற 100 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன

No comments:

Post a Comment