பயோ இன்பர்மேட்டிக்ஸ் அண்டு கம்ப்யூடேஷனல் பயாலஜி
கணிதம்,
வேதியியல், உயிர்வேதியியல், இன்பர்மேட்டிக்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல்
இன்டலிஜென்ஸ் தொடர்பான தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மூலக்கூறு
அளவிலான நுண்ணிய உயிரியல் பிரச்னைகளுக்கு
பயோஇன்பர்மேடிக்ஸ் வல்லுனர்கள் தீர்வு காண்கின்றனர். கம்ப்யூடேஷனல்
பயாலஜி ஆய்வுகள், சிஸ்டம் பயாலஜியிலும் உதவும்.
சீக்வன்ஸ் அலைன்மென்ட், ஜீன் பைன்டிங், ஜீனோம்
அசெம்ப்ளி, புரோட்டீன் ஸ்டிரக்சர் அலைன்மென்ட், புரோட்டீன் ஸ்டிரக்சர் பிரடிக்ஷன், ஜீன் எக்ஸ்பிரஷன் பிரடிக்ஷன்,
புரோட்டீன்புரோட்டீன் இன்டராக்ஷன், மாடலிங் ஆப் எவல்யூஷன்
போன்ற பிரிவுகளில் இந்த துறையில் ஆராய்ச்சிகள்
நடந்து வருகின்றன.
ஆயிரக்கணக்கான
இழைகள் ஒன்றாக இணைவதால் ஒரு
உயிரினத்தின் ஜீனோம் உருவாகிறது. இதை
சீக்வன்ஸ் அசெம்ப்ளி என்கின்றனர். கம்ப்யூட்டர் உதவியுடன் பயோ இன்பர்மேட்டிக்ஸ் வல்லுனர்கள்
இதில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஒரு ஜீனோம் இழையின் டி.என்.ஏ., வரிசையை
கண்டறிந்து, அந்த ஜீனின் பணி
என்ன என்பதை ஆராய்வதே ஜீன்
அனாலிசிஸ். தேர்ந்தெடுந்தெடுத்த ஜீன்களை முன்பே அறியப்பட்ட
ஜீன்களுடன் ஒப்பிடுகின்றனர். இதன் மூலமாக நோய்
உருவாவதின் அந்த ஜீனின் பங்கு
குறித்த தகவல்களை தேடுகின்றனர். இதற்கு திறன்வாய்ந்த கம்ப்யூட்டர்கள்,
பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேர்களை பயன்படுத்துகின்றனர். பயோஇன்பர்மேட்டிக்ஸ் ஆய்வுகளில் மிக முக்கியமானதாக இதை
கருதுகின்றனர்.
ஜீனோமின்
ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து
ஆய்வு செய்கிறது புரோட்டோமிக்ஸ். இதில் ஏற்படும் பிரச்னைகளை
கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளை, ஜீன் தெரபியை உருவாக்க
இது உதவுகிறது.
தகவல் தொழில்நுட்பம், மாலிக்கியுலர் பயாலஜி ஆய்வுகளில் உதவுகிறது.
இந்தத்துறையில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து
அதிகரித்து வருகின்றன. பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் சயின்ஸ், பார்மசூட்டிக்கல் போன்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும்
ஆய்வு நிறுவனங்களில், தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பர்மகாலஜிஸ்ட், கிளினிக்கல்
பர்மகாலஜிஸ்ட், இன்பர்மேட்டிக்ஸ் டெவலப்பர், கம்ப்யூட்டேஷனல் கெமிஸ்ட், பயோ அனாலிடிக்ஸ், அனாலிடிக்ஸ்
போன்ற பொறுப்புகளில் பணியாற்றலாம்.
எம்.எஸ்.சி., பயோஇன்பர்மேட்டிக்ஸ்
வழங்கும் சென்னை கல்லூரிகள் சில:
1. ஆல்பா
கலை அறிவியல் கல்லூரி, போரூர், சென்னை
2. ஹிந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி கேளம்பாக்கம், சென்னை
3. ஜெயா
கலை அறிவியல் கல்லூரி, திருநின்றவூர், சென்னை
4. முகமது
சதக் கலை அறிவியல் கல்லூரி,
சோழிங்கநல்லுõர், சென்னை
5. தனபாலன்
பெண்கள் கல்லூரி, கேளம்பாக்கம், சென்னை
6. வேல்
ஸ்ரீ ரங்கா கலை அறிவியல்
கல்லூரி, ஆவடி, சென்னை
7. வேல்
அறிவியல் கல்லூரி, பழைய பல்லாவரம், சென்னை
8. டாக்டர்
எம்.ஜி.ஆர்., ஜானகி
பெண்கள் கலை அறிவியல் கல்லூரி,
சென்னை
9. குருநானக்
கல்லூரி, வேளச்சேரி, சென்னை
10. ஸ்டெல்லா
மேரீஸ் கல்லூரி, சென்னை
எஸ். ஆர்.எம்., வி.ஐ.டி., போன்ற
பல்கலைகழகங்களிலும் பயோ இன்பர்மேட்டிக்ஸ் முதுகலை
படிப்பாக வழங்கப்படுகிறது.
இந்த படிப்பை வழங்கும் இந்தியாவின்
முன்னணி நிறுவனங்கள்
1. இன்ஸ்டிடியூட்
ஆப் பயோஇன்பர்மேட்டிக்ஸ் அண்டு அப்ளைடு பயோடெக்னாலஜி,
பெங்களூரு
2. இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி
(பயோகெமிக்கல் இன்ஜினியரிங் அண்டு பயோடெக்னாலஜி). ஐ.ஐ.டி., காரக்பூரிலும்
இது தொடர்பான கோர்சுகள் உள்ளன. ஐ.ஐ.டி., ஜே.ஈ.ஈ., தேர்வில் வெற்றி
பெற வேண்டும்.
3. பயோஇன்பர்மேட்டிக்ஸ்
சென்டர், ஜவகர்லால் நேரு பல்கலைகழகம். (அட்வான்ஸ்டு
கிராஜூவேட் டிப்ளமோ இன் பயோஇன்பர்மேட்டிக்ஸ்)
4. மதுரை
காமராஜ் பல்கலைகழகம் (இந்தியாவில் முதன்முறையாக பயோஇன்பர்மேட்டிக்ஸ் படிப்பை அறிமுகம் செய்தது)
5. புனே
பல்கலைகழகம், மகாராஷ்டிரா
(அட்வான்ஸ்ட்
டிப்ளமோ இன் பயோஇன்பர்மேட்டிக்ஸ்)
6. பயோ
இன்பர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் இந்தியா, நொய்டா (பயோ இன்பர்மேட்டிக்ஸ்,
பயோமெடிக்கல்இன்பர்மேட்டிக்ஸ்,
கிளினிக்கல் டிரையல், கிளினிக்கல் ரிசர்ச், பார்மசி ரெகுலேட்டரி அபயர்ஸ்,
பயோடெக்னாலஜி போன்ற பிரிவுகளில் ஒரு
வருட படிப்புகளை வழங்குகிறது. இது தவிர பல்வேறு
ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. விபரங்களுக்கு www.biionline.org
என்ற வெப்சைட்டை பார்க்கவும்.
7. மார்
அதனாசியஸ் காலேஜ் ஆப் அட்வான்ஸ்டு
ஸ்டடீஸ், கேரளா, பயோடெக்னாலஜி அல்லது
ஹாஸ்பிட்டல் அண்டு ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்டில்
எம்.பி.ஏ.,வும்
படிக்கலாம். மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில்
எம்.எஸ்.சி.,யில்
மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜி மற்றும்
பயோ மெடிக்கல் ஜெனிடிக்ஸ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பி.எஸ்.சி., பயோ
இன்பர்மேடிக்ஸ் முடித்தவுடன் கீழ்கண்ட கோர்ஸ்களையும் படிக்கலாம்
எம்.எஸ்.சி., மெடிக்கல்
மைக்ரோபயாலஜி சென்னை பல்கலைகழகம்
எம்.எஸ்.சி., ஜீனோமிக்ஸ்மதுரை
காமராஜர் பல்கலைகழகம்
எம்.எஸ்.சி., மெடிக்கல்
லேப் டெக்னாலஜி ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம்
எம்.எஸ். சி., கிளினிக்கல்
ரிசர்ச்
No comments:
Post a Comment