Sunday 6 May 2012

சட்டதுறை தொடர்பான படிப்பு


அனைவர் மனதிலும் உள்ள ஒரு கேள்வி சட்டதுறை தொடர்பானபடிப்புகளை நம்மால் பகுதி நேரத்திலோ அல்லது தொலை தூர கல்வி திட்டத்திலோ படிக்கமுடியுமா என்பதுதான்.

ஆனால் இதில் வருத்தபட வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்தியாவில் இளநிலைசட்ட படிப்பை எந்த ஒரு பல்கலைகழகமோ அல்லது கல்வி நிறுவனமே பகுதி நேரத்திலோஅல்லது தொலை தூர கல்வி திட்டத்திலோ வழங்குவது இல்லைஅப்படி வழங்கினால்அந்த பட்டத்தை இந்திய பார் கவுன்சில் அங்கிகரிப்பதும் இல்லை.

ஆனால் பல சட்ட பல்கலைகழகங்கள் டிபி.ஜிடிப்ளோம மற்றும் முதுநிலை பட்டங்களை தொலைதூர கல்வியின் மூலம் வழங்குகின்றனஅதில் ஒன்று தமிழகத்தில் உள்ளதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம். இந்த பல்கலைகழகம் கீழ் பட்டியலிட்டுள்ள‌ படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்குகின்றது.

Post Graduate Diploma Courses
.  
வணிக சட்டம்(Business Law) – P.G.D.B.L
2.      சுற்றுசூழல் சட்டம்(Environmental Law) – P.G.D.E.L
3.      தகவல் தொழில்நுட்ப சட்டம்(Information Technology Law) – P.G.D.I.T.L
4.     அறிவுசார் சொத்து சட்டம்(Intelectual Property Law) – P.G.D.I.P.L
5.      தொழிலாளர் சட்டம்(Labours Law) – P.G.D.L.L
6.      மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி(Human Rights & Duties Education) – P.G.D.H.R & D.E

படிப்பு காலம்:
ஒரு வருடம்

தகுதி
இளநிலை / முதுநிலை முடித்து இருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு துறையில் இளநிலை படித்து கொண்டு இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கீழ் பட்டியலிட்டுள்ள மாலை நேர படிப்புகளையும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைகழகம் வழங்குகின்றது.

Post Graduate Diploma Courses.
1.       வணிக சட்டம்(Business Law) – P.G.D.B.L
2.      தகவல் தொழில்நுட்ப சட்டம் (Information Technology Law) – P.G.D.I.T.L
3.      அறிவுசார் சொத்து சட்டம்(Intelectual Property Law) – P.G.D.I.P.L
4.     சுற்றுசூழல் சட்டம்(Environmental Law) – P.G.D.E.L
5.      நுகர்வோர் சட்ட கல்வி(Consumer Legal Law) – P.G.D.C.E

படிப்பு காலம்
ஒரு வருடம்

தகுதி 
இளநிலை / முதுநிலை முடித்து இருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு துறையில் இளநிலை படித்து கொண்டு இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேரம்:
அனைத்து வேலை நாட்களிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை.

ஆவனம் பற்றிய சாண்றிதழ் படிப்பையும் இந்த பல்கலைகழகம் வழங்குகின்றது 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இதனை படிக்க தகுதியுள்ளவர்கள்.

இவை அல்லாமல் கீழ் பட்டியலிட்டுள்ள பல்கலைகழகம் / கல்வி நிறுவனங்கள் சட்ட கல்வியில் ஒரு சில துறைகளை தொலைதூர கல்வியின் மூலம் வழங்குகின்றது.

1.       National Law School of India UniversityBangalore.
2.       National Law UniversityJodhpur.
3.       IGNOU – School of Law.
4.      Alagapa University, Karaikudi.
5.      Annamalai University, Chidambaram.
6.      Bangalore UniversityBangalore.
7.      University of HyderabadHyderabad.
8.      Madurai Kamaraj UniversityMadurai.
9.      Amity Law SchoolNew Delhi.

எந்த கல்வி நிறுவனமும் இளநிலை சட்ட படிப்புகளை தொலை தூர கல்வியின் மூலமோஅல்லது பகுதி நேர படிப்புகள் மூலமோ அளிப்பது இல்லை.

கல்வி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் TNTJPNO.COM கல்வி வழிகாட்டுதல்குழுவை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

No comments:

Post a Comment