Sunday, 13 May 2012

மருத்துவ துறை


மருத்துவ அறிவியலில் பல புதிய துறைகளின் வரவால் அதற்கேற்றவாறு கற்பித்தலின் வடிவங்களிலும் புதிய கூறுகள்
உருவாகின்றன. அதனடிப்படையில் சில புதிய பிரிவுகள் தற்போது தொடங்கப்படவுள்ளன. இவற்றை குறிப்பாக பி.எஸ்.சி இளங்கலை அறிவியலைப் படித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவ துறையில் மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் உறவுப்பாலமாகத் திகழ்கின்றவர்கள் பாராமெடிக்கல் எனும் மருத்துவ உதவிப் பிரிவினைப் படித்தவர்கள்தான். இவர்களால்தான் பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே, கதிர்வீச்சு, காயத்திற்கு மருந்திடல், மருந்தாளுகை என பல்வேறு பணிகள் நிகழ்கின்றன.

அந்த அடிப்படையில் புதிதாக இந்தாண்டு முதல் எம்.எஸ்.சி. ரேடியோ பிசிக்ஸ், எம்.எஸ்.சி வைராலஜி என்ற முதுகலை மருத்துவப்படிப்பு அறிமுகமாகியுள்ளது. தற்போது சி.டி.ஸ்கேன், ரேடியோ கதிரலைப் பாளிணிச்சுதல், லேசர் என்பது மருத்துவத் துறையில் பெருகிவிட்டது. நோயைக் கண்டறியவும், அவைகளை நீக்கவுமான கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ள இந்த முதுநிலை படித்தவர்களுக்கு வாளிணிப்பு கிடைக்கவுள்ளது.பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அங்கீகாரம் பெற்ற இதனையும், புனாவிலுள்ள தேசிய நோய் கிருமிகள்ஆய்வககத்தின் கல்வி பிரிவால் ஏற்கனவே பி.எஸ்.சி விலங்கியல்,நுண்ணுயிரியல் படித்தவர்களுக்கு எம்.எஸ்.சி. வைரலாஜி கற்பிக்கவுள்ளனர்.

ஓராண்டு இதேபோல் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ் என்ற டிப்ளமோ கல்வியையும் இனி வழங்கவுள்ளனர். இதில் சேரவுள்ளவர்களுக்கு மனித உடல்கூறு, நோளிணிகள் தொடர்பாகவும் அதன் பின்னர் முக்கிய நோய் தீர்க்கும் மருந்துகள், நோயாளரின் நோய் குறிப்புகளைப் படித்து அதற்கேற்ப அவற்றை கையாளும் பயிற்சியும் தரப்படவுள்ளது. கடந்தாண்டு முதல் இந்த டிப்ளமோ சென்னை மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப்போலவே அதிகளவு பரவலாக வாய்ப்புள்ள சானிடரி சயின்ஸ் டிப்ளமா படிப்பை நீண்ட காலமாக முதுநிலைக் கல்வியாக திண்டுக்கல் காந்தி கிராமிய ஊரகப் பல்கலைக் கழகம் வழங்கிவருகிறது. இதனை பி.எஸ்.சி வேதியியல் பயின்றுள்ளவர்கள் மட்டுமே படிக்க இயலும். அதிலும் நுழைவுத் தேர்வுண்டு. ஆக அறிவியல் துறையில் பி.எஸ்.சி. இளங்கலை பிரிவில் வேதியியல், உயிரியல், விலங்கியல்,நுண்ணுயிரியல் படித்துவிட்டு வெறுமனே கூட இதுபோன்ற வேலை வாய்ப்புடன் நல்ல சம்பளம் ஈட்டக்கூடிய இதுபோன்ற மருத்துவத்துறையின் முதுகலை டிப்ளமோவை படிப்பது உடனடியாக பலனளிக்கும்.

1 comment:

  1. இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு இணையதளம் மிக்க அருமையாக உள்ளது....

    ReplyDelete