பெங்களுரூவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் கல்வி நிறுவனம், எம்.எஸ்., எம்.டி., யுனானி படிப்புகளுக்கு, சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பி.யு.எம்.எஸ்., பட்டம் மற்றும் சி.சி.ஐ.எம்., ஆல் அங்கீகரிக்கப்பட்ட யுனானி மருத்துவ கல்லூரிகளில், 6 மாத மற்றும் 12 மாத டிப்ளமா படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை, பல்கலைக்கழக இணைய தளத்தில் டவுண்லோடு செய்து அத்துடன் ஆயிரத்து 25 ரூபாய்க்கான டி.டி மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அக். 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நுழைவுத்தேர்வு வரும் அக்டோபர் 30ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.nium.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment