
கல்வித் தகுதி
+2 பாடத்திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் முக்கியப் பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
கணிதத்திற்குப் பதிலாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கணிதத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
கட்டணம்: அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைந்த அளவே இடங்கள் உள்ளன. ஆப்டோமெட்ரியில் நவீனத் தொழில்நுட்பமும் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளையே முழுதாக நம்பி இருக்க வேண்டிய நிலையில் ஆண்டிற்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
ஆப்டோமெட்ரி படிப்புகள் எங்கு படிக்கலாம்?
அரசு மருத்துவக் கல்லூரிகள் (எக்மோர் அரசு கண் மருத்துவமனை, சென்னை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி) மற்றும் பிரபல தனியார் கண் மருத்துவமனைகளான அகர்வால் கண் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா இவை அனைத்திலும் 50க்கும் குறைவான சீட்டுகளே இருப்பதால் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எத்தனை ஆண்டுகள்?
பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்று 4 வருடம் முதல் 1 வருடம் என அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப படிக்கலாம், அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து தனியார் மருத்துவமனைகள் இந்தப் படிப்பினைத் தருவதால் உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
வேலை வாய்ப்பு
தனியார் மருத்துவமனைகளில் படிப்பவர்களில் 90 சதவீதம் பேரை அந்தந்த மருத்துவமனைகளே வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. அனைத்து விதமான நவீனத் தொழில்நுட்பமும் இங்கு கற்றுத் தரப்படுவதால் தனியார் ஆய்வுக் கூடங்களில் வேலை செய்ய முடியும். அதிகமாக வருமானத்தை அள்ளித்தரும் துறைகளில் ஒன்றாக ஆப்டிக்கல் துறை மாறி வருவதால் வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
உண்மை, இன்று அதிகமாக வேலை வாய்ப்பு இருக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்று... மேலும் சேவை மனப்பான்மை உள்ளவர்களும் இந்த படிப்பில் சேரலாம்....!!!!
ReplyDelete