Saturday 19 May 2012

இலவச கல்வி உதவி தொகை


பள்ளி படிப்பு
1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு
புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
பட்ட படிப்பு
1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1000 வரை கிடைக்கும்.
2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.
3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (வருடத்திற்க்கு ரூ.25,000 வரை). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது. (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி, என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.
பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை
1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும் கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.
2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் மாதம் ரூ. 2000 வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.
3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.5000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.
மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு
1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது, இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.
2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது. 
2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.
வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை
அமெரிக்காவில் உதவி தொகை பெற
GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் மாதம் ரூ.80,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா விசா வாங்குவது மிக மிக கடினம்.
இங்கிலாந்தில் உதவி தொகை பெற
IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் மாதம் ரூ.60,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி).
பிற நாடுகள் : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.
பிற கல்வி உதவிகள்
அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லூரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc…..)
நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

சர்வதேச டிப்ளமோ உதவித்தொகை :

யுனைடெட் வேர்ல்டு காலேஜஸ் ஸ்காலர்ஷிப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, வெனிசுலா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங் மற்றும் உலகின் பல நாடுகளில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ கல்வி பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் 1993 ஜனவரி 9ம் தேதிக்கு பின்னரும், 1996 பிப்ரவரி 29 தேதிக்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 2011 ஜனவரி 28 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு: www.uwc.org இமெயில்: parekh.smita@mahindra.com போன் 022 24974625

என்.பி.எச்.எம். வழங்கும் சிறப்பு உதவித்தொகைகள் :

உயர்நிலை கணிதத்திற்கான தேசிய வாரியம்(என்.பி.எச்.எம்), பி.ஏ./பி.எஸ்சி./பி.டெக்./பி.இ./எம்.ஏ./எம்.எஸ்சி. பட்டதாரிகள் அல்லது இறுதிவருட மாணவர்களில் அனைத்து நிலைகளிலும் முதல்வகுப்பு மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு, உதவித்தொகையினை வழங்குகிறது.

இந்த உதவித்தொகையானது, முதல் மற்றும் இரண்டாம் வருடத்தில் ரூ.16 ஆயிரம், அடுத்த வருடங்களில் ரூ.18 ஆயிரம், ஒரு வருடத்திற்கு 20 ஆயிரம் மற்றும் மத்திய அரசின் விதிமுறைப்படி வீட்டு வாடகைக்கான உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படும். காலஅளவு 4 வருடங்கள்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் இதற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி டிசம்பர் 16.
இது சம்பந்தமான விரிவான விவரங்களுக்கு www.career360.com என்ற வலைதளத்தை அணுகவும்.

பி.எட்., படிப்பு :

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக்கல்வியில் பி.எட்., படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பல்வேறு பாடங்களில் இளநிலை/முதுநிலை படித்தவர்கள் சேரலாம் இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.b-u.ac.in/ 0422  2428216 / 2427742

பி.எச்டி., சேர்க்கை :

சண்டிகரில் உள்ள பி.இ.சி., பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறியியல் பாடங்களுக்கான பி.எச்டி., சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவில், அப்ளைடு சயின்ஸ் அன்டு மேனேஜ்மென்ட், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் இன்ஜினியரிங் போன்ற பாடங்களில் பி.எச்டி., செய்யலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.pec.ac.in/

உதவித்தொகையுடன் எம்.பில்., படிப்பு :

கோல்கட்டா பல்கலைகழகத்தில் எம்.பில்., பாரின் பாலிசி படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்குwww.caluniv.ac.in/ 913324398645

No comments:

Post a Comment