Thursday 31 May 2012

சிறந்த எதிர்காலம்!!


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளுக்கே சிறந்த எதிர்காலம்!!
இன்று பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் அறிவியல் மற்றும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. நீங்கள் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை வேறு புலத்தில் முடித்தவராக இருந்தாலும் சரி, கல்லூரிப் பருவத்தில் காலெடுத்து வைக்கப் போகின்றவராக இருந்தாலும் சரி, இதைக்கவனமாகப் படிக்கலாம்.

இன்றைய மாணவர்களுக்கு முதலிலேயே ஆறு இலக்க ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. இந்த இலக்கை நாம் படித்த அறிவியல் மற்றும் கணிதம் தவிர்த்த பிற படிப்புகளால் தர முடியுமா என்ற கேள்வியும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. தற்போது வேலை வாய்ப்பு சந்தையில் இது போன்ற ஒரு நிலை இருந்தால் கூட எதிர்காலத்தில் இந்த நிலை கணிசமாக மாறிவிடும் என்று கணிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான வேலை வாய்ப்பு சந்தையில் தற்போது மவுனமாக நிலவும் சூழ் நிலையின் அடிப்படையிலேயே இந்தக் கணிப்பு வெளியாகி உள்ளது.
எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை பின்வரும் 3 காரணிகளின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படும் என்று வேலை வாய்ப்பு சந்தை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கம்ப்யூட்டரால் செய்ய முடியாத வேலைகளை செய்ய முடிவதன் மூலம் மட்டுமே எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையின் தன்மை இருக்கும். கம்ப்யூட்டர் செய்யும் வேலைகளையே செய்பவர்களின் வேலைக்கான வாய்ப்புகள் மந்தமாகும்.
தற்போது மிக அதிகபட்ச ஊதிய விகிதங்களுடன் இருக்கும் பல்வேறு பணிகளுக்கும் எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையில் கிராக்கி குறைவதுடன் ஊதிய விகிதங்களும் கணிசமாகக் குறையும் வாய்ப்புகள் உள்ளது.
தொழில் நுட்ப ரீதியான படிப்புகளைப் படித்தவர்கள் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான பணிகளில் இருப்பது அரிதாக மாறிவிடும். இதனால் அவர்கள் சுயமாக தங்கள் துறை சார்ந்த பணிகளைச் செய்வார்கள்.
எதிர்காலத்தில் அதிகபட்சமானோர் ஸ்டெம் (STEM) துறை சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவதுடன் அவர்களுக்கே அதிக பட்ச ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது Science, Technology, Engineering, Mathematics ஆகிய துறைகளையே ஸ்டெம் என்னும் சுருக்கம் குறிக்கிறது. இனி ஒரு தனி நபரின் திறமையைச் சார்ந்தே நல்ல ஊதியமும், பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்குமே அன்றி, கல்வித் தகுதியைப் பொறுத்து அமையப் போவதில்லை.
தற்போதே அதிகமான பணிகளை கம்ப்யூட்டர் வாயிலாக செய்து வருகிறோம். இது இனியும் 2 மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஸ்டெம் துறைக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதங்கள் அதிகரிக்கும்.
மொத்தத்தில் எதிர்காலத்தில் கம்ப்யூட்டரால் செய்ய முடியாத, மனிதனுக்கும் மனிதனுக்குமான பரிமாற்றங்களில் உள்ள பணிகளுக்கே நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது

No comments:

Post a Comment