இதைச் சுருக்கமாக விஸ்காம் என்பார்கள். இந்த துறையில் படிப்பு முடித்தவர் கள் நெட்
வானொலி சின்னத்திரை என்று பிடித்தமான மீடியாவில் அல்லது விளம்பரத் துறையில் வேலை பார்க்கலாம்.
இத் துறையில் உங்களுக்குத் தேவையானது. படிப்பு ப்ளஸ் நல்ல அனுபவ அறிவு. படிக்கும் போதே எந்த மீடியாவுக்குப் போகலாம் என்று நினைக்கிறீர்களோ, அதில் பார்ட் டைமாக வேலை பார்க்கத் தொடங்கி விடுங்கள். அவ்வப்போது பிரபல நிறுவனங்களுடன் இணைந்து ப்ராஜக்ட்டுகள் பண்ணலாம். மக்களின் மனவியல், என்ன மாதிரியான வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது கண்ணுக்கு இனிமையாக மக்கள் மனதில் பொருள்களை எப்படி பதிய வைப்பது ஆகியவை பற்றி இப்பயிற்சியில் கற்றுத் தருகிறார்கள்.
கல்வித் தகுதி
12ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த துறையில் சேரலாம். இருப்பினும் பட்டப்படிப்பு முடித்த பிறகு இத்துறையில் பயிற்சி பெற்றால் எளிதாக முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
வயது வரம்பு
17 வயது முடிந்தவர்களாக இருக்க வேண்டும். சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு தளர்த்திக் கொள்கிறார்கள்.
எங்கே படிக்கலாம்
தற்பொழுது அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இப்படிப்பு கற்றுத் தருகிறார்கள். இருந்தாலும் இந்த துறைக்கு தொடர்புடைய செய்முறை தேர்வுகளில் பயிற்சி தருகின்ற வசதி பெற்ற கல்லூரியை
தேர்வு செய்து இப்பாடம் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து சேர்வது நலம்.
1 | Film & Television Institute of Tamil Nadu | CIT Campus, Chennai 600113 India Phone : 044-22542212 Website :http://www.tn.gov.in/misc/film/filmtv-announcement.htm | Programs: 3 year Diploma course in Direction and Screen Degree, Cinematography,Film Processing,Sound Recording,Film Editing. Minimum Qualification-+2 | |
2 | The L V Prasad Film and TV Academy | 28, Arunachalam Road, Saligramam, Chennai - 600 093, India Email : info@prasadacademy.com Phone : 91 44 65257476, 65257477, 65257478 Website :http://www.prasadacademy.com/ | Programs: 2 year Full-Time Post Graduate Diplomas in Film Direction, Cinematography, Editing and Sound Recording. Admission: open to students who have passed 12th standard as well as to graduates in any discipline + Entrance Examination + Interview |
No comments:
Post a Comment