இன்ஜினியரிங் பிரிவுகளில் புகழ்பெற்ற ஒரு துறை ‘ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்’. இத்துறையில் பி.இ., பி.டெக்., படிப்புகள் இருக்கின்றன. இது சம்மந்தப்பட்ட ‘டிப்ளமோ’ படிப்பும் சில பாலிடெக்னிக்
கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இதுகுறித்து ஐ.ஐ.டி.,யில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு பிரிவுகளும் உள்ளன.
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் துறையில் பி.இ., பி.டெக்., பிரிவுகளில் சேருவதற்கு, ‘பிளஸ் 2’வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கொண்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இதன் வழியாக ஐ.ஐ.டி.,களில் உள்ள ஏரோநாட்டிக்கல் பட்டப்படிப்புகளில் சேர முடியும். ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களில் சேர முடியும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பு உள்ளது. தவிர தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் இப்படிப்பு உள்ளது. இந்தியாவில் பெங்களூரு, சென்னை, கோவை,டோராடூன், குர்கான், இந்தூர், கான்பூர், மும்பை, நாக்பூர், டில்லி, பாட்னா, புனே போன்ற பகுதிகளிலும் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, ஏரோநாடிகல் இன்ஜினியரிங் துறையில் கால்பதிக்கலாம்.
வேலைவாய்ப்பு: இந்தியாவில் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் கற்றவர்கள் அதிகமாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ‘இஸ்ரோ’வில் பணிபுரிகின்றனர். இக்கல்வி கற்றவர்கள் ‘சிவில் ஏவியேஷன்’, ‘நேஷனல் ஏரோநாடிகல் லேபாரட்டரி’ போன்ற விமானதுறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வாய்ப்பு பெறுவார்கள்.
மேலும் ஏரோநாடிக் இன்ஜினியர்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறப்பான வேலைவாய்ப்பு உள்ளது. இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பராமரிப்புப் பணிகளை வெளிநாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைத்துவிடுவதால், இந்தியாவில் இத்துறையில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு மிகக்குறைவு.
அதிக மதிப்பெண் (90-95) பெறும் நம்பிக்கை உள்ள மாணவர்களுக்கு இத்துறை நல்ல வாய்ப்புகளை வழங்கும்.
டில்லியில் உள்ள ரைட் பிரதர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் ரிசர்ச் நிறுவனத்தில் பி.இ., ஏரோநாட்டில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பிரிவில் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்தவர்கள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு
www.wrightbrothersinstitutedelhi.com
வாழ்த்துக்கள். இத்துறையைப் பற்றி இன்னும் சிறிது விரிவாகவும் மற்றும் தெளிவாகவும் விளக்கலாம்.
ReplyDelete