Friday, 11 May 2012

கனடா கூட்டுப் பயிலகத் திட்டத்தில் பாலிடெக்னிக் பயிற்சிகள்


கனடா கூட்டுப் பயிலகத் திட்டத்தில்
பாகடெக்னிக் பயிற்சிகள்
குறுகிய காலத்தில் சுய தொழில் திறனைப் பெறும் பயிற்சி
வகுப்புகளை மதுரை தமிழ்நாடு பா-டெக்னிக் கல்லூரி

நடத்துகிறது. கனடா-இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின்கீழ்
அக் கல்லூரியின் தொடர் கல்வி நிலையத்தில் நடத்தப்படும்
இப்பயிற்சியை பூர்த்தி செய்பவர்களுக்கு அரசு சான்றிதழ்
கிடைக்கும்.

1946-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பா-டெக்னிக்
கல்லூரி தன்னாட்சிக் கல்வி நிறுவனம். இங்கு 7 முழுநேர
டிப்ளமோ, 3 பகுதி நேர டிப்ளமோ வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இப்படிப்புகள் வேலைவாய்ப்புக்கு பெரிதும் உதவுகின்றன.
பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய முன்னணி நிறுவன
ங்களும் மாணவர்கள் படிக்கும்போதே வேலை முகாம் நடத்தி
தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தொழில் நிறுவனங்களின்
பணிபுரிபவர்கள்  கல்லூரிக்கு வந்து, தொழில் துறையில் அ
வ்வப்போது ஏற்படும் மாற்றங்களை விளக்குகின்றனர். இது
மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமைகின்றது.
மேலும் விவரங்களுக்கு இணையதளம்
www.upesindia.org

No comments:

Post a Comment