Friday, 18 May 2012

தீ பாதுகாப்பு வேளாண்மை


உள்நாடுகள் முதல் உலக நாடுகள் வரை அதிகமான வேலை வாய்ப்புகள்

க்கூடிய புதிய படிப்பாக அறிமுகமாகவிருக்கும் படிப்பு இது. இந்தியாவின்,
இன்னும் தமிழகத்தில் கூட இது சார்ந்த புதுப்புது கல்வி நிலையங்கள் உருவாகி வருகின்றன. தீ என்னும் சக்தியின் தீவித்தையும்,
ஆக்ரோசத்தையும் நாம் பல கூட்டங்களில் கண்டிருக்கலாம். தீ பல
ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குத் துணை நிற்பது போல் அழிவை உண்டாக்குவதிலும் அதற்கு நிகர் அதுவே.தீயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி,
அதன் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் முறைகளை அறியச் செய்யும்
நவீன அறிவியல் பற்றிய படிப்புதான் இது.

மிகப் பெரிய கட்டிடங்கள், நிறுவனங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், இன்னும் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படலாம். சுற்றுச்சூழலின் விளைவுகள்,தீயைக் கண்டறிதல், தீயணைக்கும் சாதனங்களைப் பயன்படுத்துதல், பொருள்களைக் காப்பாற்றுதல், தீயின் பரவும் தீவிரத்தை க் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பொறியியல் மற்றும் அறிவியல் நுட்பங்களின் அடிப்படையில் கற்பிக்கப்படும் பாடமுறைதான் தீ பாதுகாப்பு மேலாண்மை என்பது. அண்மைக் காலங்களில் இந்த வகைப் படிப்புகள் தமிழகத்தில் சற்று பிபலமாகி வருகின்றன. சாகச மனநிலை உடைய மாணவர்கள், பொதுநல மனப்பான்மையுடையவர்கள், சேவை புரியும் பாங்குள்ளவர்கள்தான் இந்தப் படிப்பில் சிறப்பாக வர முடியும்.  காரணம் இந்தத் துறை சற்று அபாயகமானபின்னணியைக் கொண்டுள்ளதுதான்.

கல்வித் தகுதிகள்

+2 படித்தவர்கள் கணிதம், பொதுஅறிவியல் படித்தவர்கள் இப்பட்டப்
படிப்பைப் படிக்கலாம். சில பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி
மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.சில கல்வி நிறுவனங்கள் பட்டயப்
படிப்புகளையும், சான்றிதழ் படிப்புகளையும் குறைந்த கால பாடமாக
சொல்லித் தருகின்றன. இதற்கு 10 ஆம்வகுப்பு தேர்வாகியிருப்பதே போதுமானது.

எங்கு படிக்கலாம்?

நாக்பூரில் பயர் சர்வீஸ் கல்லூரி இத்துறையில் இந்திய அளவில் புகழ் பெற்றதாகும். இங்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பாக இப்படிப்பு சில வேறுபட்ட பெயர்களில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், மாநில
சின் கட்டுப்பாட்டில் பல தீயணைக்கும் பயிற்சிப் பள்ளிகள் செயல்படுகின்றன.இங்கு இது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் வழங்குகின்றனர்.

இது தவிதனியார் பள்ளிகள் புகழ் பெற்றதாகும். ஆங்காங்கே பல்வேறு
பிரிவுகளில் ஆறு மாதம் முதல் இண்டு,மூன்று வருடப் படிப்புகளாக சொல்லித்தருகின்றன.

வேலை வாய்ப்பு:

நிகழ்காலம் மட்டுமின்றி, எதிர் காலங்களிலும் பிகாசமான வாய்ப்புகளைப் பெற்றுள்ள துறை இது. தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனங்களில்
உள்ள பல பிரிவுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் பெட்ரோலிய கிணறுகள் மற்றும் எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இவர்களுக்கு மிகுந்த வவேற்பு உள்ளது. இசாயனப் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலும் நல்ல வாய்ப்பு
உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களில் பயர் சேப்டி ஆபிசர் என்பது
இன்றைய காலங்களில் ஒரு தவிர்க்க முடியாத பதவியாகி விட்டது.
இன்னும் விமான நிலையங்களிலும்,நிறுவனங்களிலும் இப்படிப்பு
முடித்தவர்களின் சேவை அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆக சவால்கள் மிகுந்த இந்தப் பணியைப் பெற அதிக சவால்கள் இருக்காது.

No comments:

Post a Comment