எத்தனை பெரிய எத்தனாக இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தைக் குற்றம்
புரியும் இடத்தில்
விட்டுச் செல்வான் என்பதுதான் இயற்கையின் நியதி. இந்த நியதியின் பரிணாம வளர்ச்சிதான் தடய அறிவியல் துறை. உலக அளவில்
இந்தத் துறை பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தத் துறையின் சாதனைச் சுவடுகள் அதிகம்தான்.
கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் முழு விபரத்தையும் இந்தத்துறை சார்ந்த அறிவியல் மூலம் எளிதாகக்கண்டுபிடித்து விட முடியும். டி.என்.ஏ.,பின்க்கர் பிரிண்டிங் டெக்னாலஜி என்பது இந்தத் துறை சார்ந்த அபரிமிதமான வளர்ச்சியின் உதாரணம். மனிதருக்கு மனிதர் முற்றிலும் வித்தியாசப்படுகின்ற
டி.என்.ஏ. பதிவுகள் மூலம் இத்துறை பல்வேறு வகையான புலனாய்வு
களைச் செய்து சாதனை படைத்து வருகிறது. இதன் மூலம் பாலியல் சார்ந்த
குற்றங்களையும், பெற்றோர்களுக்கிடையே நடைபெறும் குழந்தை
உரிமைப் பிரச்சனை போன்ற அவிழ்க்க முடியாத பல்வேறு ரகசிய முடிச்சுகளையும் எளிதாக அவிழ்த்து விடுகிறது.இந்தத் தடய அறிவியல் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து விரிந்து வருவது இத்துறை சார்ந்து படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும் என்று நம்பிக்கையளிக்கிறது. தற்போது Food Forensic Science, Medical Forensic Science என்று இந்தத் துறை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
தகுதி
பெரும்பாலும் இந்தத்துறை M.Sc.,Forensic Science என்ற படிப்புகளாகஉள்ளதால் B.Sc., பட்டத்தில் உயிரியல்,வேதியியல், உயிர் வேதியியல், விவசாயம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சில பல்கலைக்கழகங்களில் இந்தப்பாடம் கிரிமினாலஜி போன்ற படிப்புடன் இணைந்த பாடமாக நடத்தப்படுகிறது. இன்னும் இந்தப் பாடத்தில்
சேர அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் மூலமாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
எங்கே படிக்கலாம்?
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்களில்தான் இந்தப் படிப்பு இருந்தாலும்
இந்திய அளவில் பல்வேறு கல்லூரிகளில் இந்தப் பாடம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment