Friday, 18 May 2012

உணவு பதனிடுதல்


இப்பூவுலகில் மனித இனம் உள்ளவரை மருத்துவத்
துறையின் மவுசு குறையாது என்பது போல உணவுத்துறையின் அவசியமும் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டேதான் இருக்கும். கடந்த காலங்களுடன்
ஒப்பிடும் போது எல்லா வகையான துறைகளிலும் போற்றத்தக்க முன்னேற்றங்களும் விரிவாக்கமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு உணவுத்துறை மட்டும் விதிவிலக்கா, என்ன? நமது முன்னோர்களும், ஏன் நாமும் கூட கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவைத்த உணவு முறைகளும், வகைகளும் எப்படியைல்லாம் மாறிவிட்டன.இன்றைய உலகம் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காலை உணவைக் கையில் வைத்து, கடித்துக்கொண்டே ஓடும் அளவுக்கு அவசம். இந்த அவசத்திற்கு ஈடு கொடுக்கும் கலாச்சாமாக அறிமுகப்பட்டிருப்பதுதான் ‘பாஸ்ட் ஃபுட்பாக்கெட் ஃபுட்’உணவுமுறைகள். இப்படிப் புது வகையான உணவு முறைக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கவும் பல்வேறு வகையான உணவு நிறுவனங்களும் தங்களது வியாபர பார்வையை இத்துறை மீது ஆர்வத்துடன் பதிக்க ஆம்பித்துவிட்டன. அதன் விளைவுதான் இந்த ஃபுட் பிராசசிங் எனும் படிப்பும் அதனைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்திய இயற்கை வளங்களின் மதிப்பு எந்த நாட்டிற்கும் குறைந்தது இல்லை. உலக அளவில் உணவு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், உணவுப் பற்றாக்குறையால் மக்களில் சுமார் 20 சதவிகிதத்தினர் பசியால் வாடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. இதற்கான முக்கிய  காரணங்களில் ஒன்று அதிகமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களைப் பதனிட்டுப் பாதுகாத்து வைப்பதற்கான தொழில்நுட்பமும், வசதியும் இல்லாமையே. இதனாலேயே பல்வகையான உணவு வளங்கள் உபயோகமின்றி அழுகி அழிகின்றன. இதனைச்சரியாக உணர்ந்த மத்திய அசு உணவுப் பதனிடல் என்னும் தனித் துறையையே உருவாக்கி அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பல கோடி முதலீடு செய்து இத்துறையின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கல்வித் தகுதிகள்

இந்தப் பாடம் சில பொறியியல் கல்லூரிகளில் B.Tech என்னும்பாடமாக வைக்கப்பட்டிருப்பதால் பொறியியல் கல்விக்கான அடிப்படைத்
தகுதிகளே தேவைப்படுகின்றன. இந்த நான்கு ஆண்டு இயந்திவியல்,
வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களாக உள்ளன. ஆகவே +2தேர்வில் மேற்கண்ட பாடங்களைப் படித்தவர்கள் இந்தப் படிப்பிற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே கணிதம், உயிரியல் பிரிவு மாணவர்களுக்குத் தான் இந்தப் படிப்பில் சே அதிக வாய்ப்புள்ளது. அதிலும் மாணவர்கள் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment