பயோடெக்னாலஜி துறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, பலவிதமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
படிப்புகள்
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் பி.எஸ்சி பயோடெக்னாலஜி(3 வருடங்கள்) படிப்பை மேற்கொள்ளலாம் அல்லது பி.டெக் பயோடெக்னாலஜி படிப்பை(4 வருடங்கள்) மேற்கொள்ளலாம். இளநிலைப் படிப்பை முடித்தப்பிறகு, எம்.எஸ்சி பயோடெக்னாலஜி அல்லது எம்.டெக் பயோடெக்னாலஜி(இரண்டுமே 2 வருடங்கள்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேரலாம்.
எம்.எஸ்சி படிப்பை பொறுத்தவரை, பல சிறப்பு படிப்புகள் உள்ளன. MSc in Agriculture Biotechnology, MSc in Marine Biotechnology, MVSc in Animal Biotechnology, MVSc in Veterinary Biotechnology and MSc in Medical Biotechnology போன்றவை அவற்றுள் சில. டெல்லி மற்றும் காரக்பூர் ஐஐடி-கள் மற்றும் GGSIP, AIIMS and Jawaharlal Nehru University போன்ற கல்வி நிறுவனங்கள், 5.5 வருட ஒருங்கிணைந்த பி.டெக்/எம்.டெக் படிப்பை வழங்குகின்றன. இதைத்தவிர, நீங்கள் இன்னும் மேம்பட்ட படிப்பை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், பயோடெக்னாலஜி துறையில், பிஎச்.டி அல்லது பிஎச்.டி படிப்புக்கு பிந்தைய ஆராய்ச்சி நிலைகளுக்கு செல்லலாம்.
தகுதி
அறிவியல் பின்புலம் கொண்ட படிப்பை முடித்திருப்பது முக்கியம். இளநிலைப் பட்ட நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பயோடெக் முதுநிலைப் படிப்புகளில் சேர, அறிவியல், பொறியியல், மருத்துவம் அல்லது தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதித் தேர்வுகள்
பி.எஸ்சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்காக நுழைவுத் தேர்வுகள், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன மற்றும் மாணவரின் பகுப்பாய்வு மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறனை இத்தேர்வுகள் அளவிடுகின்றன. இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல், பொதுஅறிவு மற்றும் திறனாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். ஒருங்கிணைந்த 5.5 வருட படிப்பில் சேர, கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
ஐஐடி -கள் நடத்தும் இந்த கூட்டு நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை, வேறு சில கல்வி நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. மேலும், சில கல்வி நிறுவனங்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
முதுநிலைப் படிப்புகளுக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலை நடத்தும் ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வின் அடிப்படையில், பலவிதமான கல்வி நிறுவனங்கள், மாணவர்களை தேர்வு செய்கின்றன. 6 ஐஐடி -கள் மற்றும் ஐஐஎஸ்சி நடத்தும் GATE தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும்கூட, அதை ஒரு தகுதியாக ஏற்று, முதுநிலை பயோடெக்னாலஜி படிப்பில் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன.

No comments:
Post a Comment