நியூசிலாந்து நாட்டிலேயே, சில அரிதான படிப்புகளை வழங்கும்
பல்கலைக்கழகமாக மாசே(Massey) பல்கலை திகழ்கிறது. இங்கு வழங்கப்படும்
விமானப் போக்குவரத்து மற்றும் கால்நடை அறிவியல் போன்ற படிப்புகள்
தனித்தன்மை வாய்ந்தவை. விரிவான
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. எனவே, ஆராய்ச்சியில் நாட்டமுள்ள மாணவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம்.
ஆங்கிலமொழிப் பயிற்சி
ஆங்கிலத்தை, தங்களின் முதல் மொழியாக கொண்டிராத மாணவர்கள், தங்களின் மொழிப் புலமையை நிரூபிக்க தகுந்த சான்றுகளைத் தர வேண்டும். மேலும், மாசே பல்கலையில் ஏதேனும் ஒரு படிப்பில் சேருமளவிற்கு ஆங்கில அறிவு இல்லையெனில், தொழில்முறை மற்றும் படிப்பைத் தொடர்தலுக்கான மையத்தில் ஆங்கில மொழிப் பாடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
இதைப்பற்றி முழு விபரங்களையும் அறிந்துகொள்ள www.english.massey.ac.nz என்ற இணையதளம் செல்லவும்.
மாணவர் சேர்க்கை
மாசே பல்கலையில் ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேருவதற்கு தேவையான கல்வி மற்றும் ஆங்கில மொழித் தகுதியை மாணவர் பெற்றிருக்க வேண்டும்.
இந்த விவரங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள www.international.massey.ac.nz என்ற தளத்தில் பார்க்கவும்.
முழுநேரப் படிப்பு
முழுநேர மாணவர்கள், ஒரு செமஸ்டருக்கு 4 பேப்பர்கள்(60 கிரெடிட்டுகள்) அல்லது வருடத்திற்கு 8 பேப்பர்களை(120 கிரெடிட்டுகள்) படிப்பார்கள். இதன்மூலம், பட்டப்படிப்பை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவுசெய்ய இயலும். உதாரணமாக, இளநிலை வணிகப் படிப்பை(BBS) முடிக்க, 360 கிரெடிட்டுகளை முடிக்க வேண்டும்.
பேப்பர்கள்
பிரிவுகள் அல்லது தொகுதிகள் என்பவை பேப்பர்கள் எனப்படுகின்றன. அறிமுக பேப்பர்கள் 100 - நிலையில் உள்ளன. பின்னர் அவை அடுத்தடுத்த செமஸ்டர்களில் 200, 300, 400 - நிலைகள் என்ற அளவில் அதிகரிக்கின்றன. மாசே பல்கலையின் ஒவ்வொரு பேப்பரும், பாடம் மற்றும் நிலையை தனிப்படுத்திக் காண்பிக்கும் பொருட்டு, 6 இலக்க குறியீட்டைக் கொண்டிருக்கும்.
பேப்பர் கிரெடிட்டுகள்
கிரெடிட் வேல்யூ(Credit value) என்பது ஒரு மாணவர், ஒரு பேப்பருக்காக நியாயமாக செலவு செய்யும் காலத்தைக் குறிக்கலாம். அளவீட்டுத் தேவைகளை திருப்திகரமாக செய்துமுடிக்க இது தேவைப்படுகிறது. ஒரு தரமான இளநிலை ஒற்றை செமஸ்டர் பேப்பரை முடிக்க, வாரத்திற்கு 12.5 மணி நேரங்கள் படிக்க வேண்டியிருக்கும். இதேபோன்று மற்ற பேப்பர்களுக்கும் அளவீடுகள் உண்டு.
மேஜர்(முதன்மை)
மேஜர் பேப்பர் என்பது, பல பேப்பர்களின் ஒரு தொகுப்பு. அது ஒரு பட்டப்படிப்பு என்ற நிலைக்குள் ஸ்பெஷலைசேஷன் என்ற நிலையை உருவாக்குகிறது. சில பட்டப்படிப்புகளில் இரட்டை மேஜர் உண்டு. அதற்கு இரண்டு ஸ்பெஷலைசேஷன் தேவை.
கற்பித்தல் முறை
வகுப்பறை கற்பித்தல்(லெக்சர்) என்பது இளநிலை என்ற அளவில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இதைத்தவிர, ஏதேனும் பயிற்சி நிலையங்கள்(டுடோரியல்கள்), ஆய்வகங்கள் மற்றும் நடைமுறை களப் பணிகள் ஆகியவற்றில் பங்கெடுக்குமாறு எதிர்பார்க்கப்படுவார்கள். இவைத்தவிர, சுய படிப்பு மற்றும் பரிந்துரைத்தவற்றைப் படிப்பது ஆகியவையும் படித்தல் நடவடிக்கையில் முக்கியமானவையாகும்.
வகுப்பிற்கான கால அட்டவணை
ஏராளமான வகுப்பறை விரிவுரைகள்(லெக்சர்) திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8 முதல் மாலை 6 வரை நடக்கின்றன. ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி விடப்படுகிறது. இந்த கால அட்டவணையைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.publictimetable.massey.ac.nz என்ற இணையதளம் செல்லவும்.
அளவீடு
பேப்பர்களை அளவிடுதல் என்பது, பல அசைன்மென்டுகள், கட்டுரைகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆய்வகப் பணிகள் மற்றும் இறுதி தேர்வு ஆகிய அனைத்து அம்சங்களையும் வைத்து அளவீடு மேற்கொள்ளப்படுகிறது.
கற்பித்தலுக்கான உதவி
கற்றல் செயல்பாட்டில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு, அதற்கென இருக்கும் ஆசிரியர்கள், வொர்க் ஷாப்புகள், தனிநபர் டுடோரியல்கள் ஆகியவற்றின் மூலமாக உதவிகள் செய்யப்படுகின்றன. இவைத்தவிர, நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், மாணவர்களின் சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வைக்கிறார்கள்.
இளநிலைப் படிப்பு
மாசே பல்கலையானது, நடைமுறை சார்ந்த அதன் கல்வித்திட்டத்தின் மூலமாக தன்னை தனித்துக் காட்டிக்கொள்கிறது. இப்பல்கலையின் 5 கல்லூரிகள் மூலம், 40க்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலைப் பட்டப் படிப்புகள் 3 வருடம் முதல் 4 வருடங்கள் வரை இருக்கின்றன. இவைத்தவிர, இளநிலைப் பட்ட டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இளநிலைப் பட்டப்படிப்பு
நியூசிலாந்து இளநிலைப் பட்டமானது, பிரிட்டிஷ் மாடலில் அமைந்துள்ளது. இப்படிப்பில், மேஜர் பாடங்களுடன், சில விருப்பப் பாடங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
இளநிலை ஹானர்ஸ் பட்டம்
வழக்கமான 3 வருட இளநிலைப் படிப்புடன், கூடுதலாக ஒரு வருட படிப்பைக் கொண்டது இப்பட்டம். எ-கா, 4 வருட இளநிலை பொறியியல் மற்றும் இளநிலை வடிவமைப்பு படிப்புகள் ஹானர்ஸ் படிப்புகளாகும். ஹானர்ஸ் வருடத்தில் ஒரு மாணவர் நுழைவதானது, சம்பந்தப்பட்ட கல்லூரியின் விருப்பம் மற்றும் மாணவரின் சிறந்த கல்விச் செயல்பாடுகளைப் பொறுத்தது.
பட்ட டிப்ளமோ
இது இளநிலை தகுதியாகும். முதுநிலைப் படிப்பிற்கான ஒரு இணைப்பு அல்லது இளநிலைப் படிப்பில், அடுத்த நிலையாகும். இந்த படிப்பானது, 1 வருட முழுநேரப் படிப்பாகும்.
முதுநிலைப் படிப்பு
ஒவ்வொரு வருடமும், மாசே பல்கலை மாணவர்களில் 20% பேர் முதுநிலைப் பிரிவுகளில் படிக்கின்றனர். வணிகம், படைப்பாக்க கலை, கல்வி, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மற்றும் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் 100 முதுநிலைப் படிப்புகள் உள்ளன. மாசே பல்கலையில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வகைகளில், முதுநிலை தகுதி கிடைக்கிறது.
முதுநிலைப் பட்ட டிப்ளமோ
இந்தவகை டிப்ளமோவானது, 1 வருட முழு நேரப் படிப்பாகும். ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்பிற்கு இது ஒரு சிறந்த படிக்கல்லாக இருக்கிறது. இந்த படிப்பில், கற்பித்தல் வழி கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளும் கிடைக்கின்றன. முதுநிலை டிப்ளமோ படிப்பிலிருந்து, முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு செல்ல நல்ல மதிப்பெண்கள் மற்றும் படிப்பு செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டம்
மாசே பல்கலையில் முதுநிலைப் பட்டம் என்பது குறிப்பாக ஆராய்ச்சி மட்டுமே சம்பந்தப்பட்டது. சில படிப்புகளில் வகுப்பறை கற்பித்தலும் கலந்துள்ளன.
பிஎச்.டி. படிப்பு
இது மிகவும் மேம்பட்ட முதுநிலைப் பட்டமாகும் மற்றும் முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிப்பதும் முக்கியம். பொதுவாக, ஒரு முனைவர் பட்டத்திற்கு 4 வருட முழுநேரப் படிப்பு அவசியம்.
மாசே பல்கலையில் படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகை விபரங்கள்
துணைவேந்தரின் முனைவர் உதவித்தொகை
வருடத்திற்கு NZ$28,000 வீதம் 3 வருடத்திற்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதுதொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள www.awards.massey.ac.nz என்ற இணையதளம் செல்லவும்.
முனைவர் பட்ட உதவித்தொகை
இதில் ஒரு வருடத்திற்கு NZ$25,000 வழங்கப்படுகிறது. இதன் முழு விபரங்களுக்கு www.awards.massey.ac.nz தளம் செல்லவும்.
நியூசிலாந்து சர்வதேச முனைவர் பட்ட உதவித்தொகைகள்
ஆராய்ச்சியின் மூலமாக முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை பெரும் உதவியை செய்கிறது. விரிவான விவரங்களுக்கு www.education.org.nz/scholarships.html என்ற இணையதளம் செல்லவும்.
NZAID நியூசி மேம்பாட்டு உதவித்தொகைகள்
நியூசிலாந்தின், சர்வதேச உதவி மற்றும் மேம்பாட்டு ஏஜென்சி மூலமாக, சில வளரும் நாடுகளின் குடிமக்களுக்கு, அவர்கள் நியூசிலாந்தில் மூன்றாம் நிலைக் கல்வியை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப்பற்றிய முழு விபரங்களுக்கு www.nzaid.govt.nz/scholarships என்ற இணையதளம் செல்லவும்.
காமன்வெல்த் உதவித்தொகை
காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் பெல்லோஷிப் திட்டத்தின்கீழ், பிற காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை நியூசிலாந்தில் மேற்கொள்வதற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.nzaid.govt.nz/scholarships/commonwealth/ என்ற இணையதளம் செல்லவும்.
பெடரல் உதவி
மாசே பல்கலையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை அமெரிக்க மற்றும் அமெரிக்கர் அல்லாத மாணவர்கள், அமெரிக்க பெடரல் மாணவர் உதவித்தொகையை அங்கு படிக்கும் காலத்தில் பெற முடியும். இதுகுறித்த விபரங்களுக்கு www.international.massey.ac.nz என்ற இணையதளம் செல்க.
மாசே பல்கலையின் வணிகக் கல்லூரி
மாசே பல்கலையின் வணிகக் கல்லூரியானது, நியூசிலாந்திலேயே மிகப் பெரியது. இந்தக் கல்லூரியில் 13,000 மாணவர்கள் படிக்கிறார்கள். மாசே பல்கலையின் நிதி ஆராய்ச்சியானது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 12வது இடத்திலும், கல்லூரியானது, நியூசிலாந்திலேயே முதலிடத்திலும் உள்ளது. மாசே பல்கலையின் வணிகக் கல்லூரியானது, வணிக ஆராய்ச்சிக்கும், தியரிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதிலும், பணியிடத்திற்கேற்றவாறு நடைமுறை அறிவைக் கொடுப்பதிலும் பெரிதும் புகழ்பெற்று விளங்குகிறது.
நிதி, பொருளாதாரம், மார்க்கெடிங், சர்வதேச வணிகம், அக்கவுண்டன்சி, மேலாண்மை மற்றும் தகவல்தொடர்பு, விமானப்போக்குவரத்து மேலாண்மை மற்றும் விமானிகளுக்கானப் பயிற்சி ஆகிய பாடங்கள்,
கல்லூரி வளாகத்திலுள்ள 5 வகையான துறைகளில் கற்பிக்கப்படுகின்றன. அவை,
* ஸ்கூல் ஆப் அக்கவுண்டன்சி
* ஸ்கூல் ஆப் ஏவியேஷன்
* ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன், ஜர்னலிசம் மற்றும் மார்க்கெடிங்
* ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மற்றும் பைனான்ஸ்
* ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்.
வணிக கல்லூரியின் பாடங்கள்
வேளாண் பொருளாதாரம், புள்ளியியல் பொருளாதாரம், நிதி பொருளாதாரம், சர்வதேச பொருளாதாரம், சமூக கொள்கைப் பகுப்பாய்வு, அக்கவுண்டன்சி, வேளாண் வணிகம், தொழில்முனைதல் மற்றும் சிறுவணிகம், மேலாண்மை, வணிக தகவல் அமைப்பு, தகவல்தொடர்பு மேலாண்மை, இதழியல் படிப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பலவிதமான படிப்புகள் உள்ளன.
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் பாடங்கள்
வரலாறு, புவியியல், தத்துவம், சமூகவியல், சமூகக் கொள்கை, உளவியல், ஆங்கிலம், வணிக உளவியல், அரசியல் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பலவகைப் பாடங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
படைப்பாக்க கலைக் கல்லூரியின் பாடங்கள்
பேஷன் டிசைன், தொழில்துறை டிசைன், புகைப்பட டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் மற்றும் வணிகம் உள்ளிட்ட பலவிதப் பாடங்கள் உள்ளன.
இசைக் கல்லூரியின் பாடங்கள்
கிளாசிக்கல் செயல்பாடு, தொகுப்பு, வரலாறு மற்றும் பகுப்பாய்வு, ஜாஸ் உள்ளிட்ட பலவிதமான பாடங்கள் உள்ளன.
கல்வியியல் கல்லூரி
ஆரம்பநிலைக் கல்வி, 8 வயது வரையான கல்வி, பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, கற்பித்தல் உள்ளிட்ட பலவித பாடத்திட்டங்கள் உள்ளன.
அறிவியல் கல்லூரி
மாசே பல்கலையின் அறிவியல் கல்லூரியில் மொத்தம் 8 வகையான பள்ளிகள் உள்ளன. இவைகளில், பலவிதமான ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இக்கல்லூரியில்,
விவசாயம், குதிரைகள் தொடர்பான படிப்பு, தோட்டக்கலை, வாழ்வியல் சுழற்சி அளவீடு(Life science Assessment), கட்டுமான மேலாண்மை, ரசாயனம் மற்றும் நேனோ டெக்னாலஜி, கணினி மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், தொழில்துறை ஆட்டோமேஷன், மெக்கட்ரானிக்ஸ், கணிப்பொறி அறிவியல், விலங்கு அறிவியல், பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, ரசாயன இயற்பியல், எகாலஜி, ஜெனடிக்ஸ், கணிதம், பிளான்ட் பயாலஜி, விலங்கியல் மற்றும் ஆற்றல் மேலாண்மை உள்ளிட்ட ஏராளமான பாடங்கள் உள்ளன.
தொழில்முறை மற்றும் தொடர் கல்வி மையம்
மாசே பல்கலையிலுள்ள தொழில்முறை மற்றும் தொடர் கல்வி மையமானது, சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் பங்கேற்பாளர்களின் தேவைக் கருதி, பல குறுகிய கால படிப்புகளை இந்த மையம் வழங்குகிறது.
கல்விமுறை ஆங்கிலப் பாடங்கள், சான்றிதழ் ஆங்கிலப் பாடங்கள், இணைப்புப் பாடங்கள், பாடச் சுற்றுலா உள்ளிட்ட பலவித திட்டங்களை மேற்கொள்கிறது. இவைப் பற்றிய விபரங்களுக்கு www.english.massey.ac.nz மற்றும் www.uniprep.massey.ac.nz என்ற இணையதளங்களுக்கு செல்லவும்.
மாணவர் நல சேவைகள்
புதிதாக நியூசிலாந்தில் நுழையும் மாணவர்களுக்கு வாழ்தல் தொடர்பாக அறிமுகம் மற்றும் உதவிகளைப் புரிய வேண்டி, பலவிதமான சேவைகளை மாசே பல்கலை வழங்குகிறது. இதன்பொருட்டு,
* சர்வதேச அலுவலகம்(International office)
* சர்வதேச மாணவர் உதவி(International student support)
* வரவேற்பு மற்றும் பழக்கப்படுத்தல்(Welcome and orientation)
* கல்விரீதியிலான உதவி(Academic support)
* ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு(Health and wellbeing)
* வளாக வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு(Campus life and leisure)
* தொழில்தகவல் மற்றும் பழைய மாணவர் தொடர்பு(Career information and Alumni relations)
உள்ளிட்ட பலவித அமைப்புகளையும், சேவைகளையும் நடத்துகிறது.
இந்தப் பல்கலையில் விண்ணப்பம் செய்தல் குறித்தான விபரங்களை அறிந்துகொள்ள www.international.massey.ac.nz என்ற இணையதளம் செல்லவும்.

No comments:
Post a Comment