Thursday, 3 May 2012

நியூசிலாந்து லிங்கன் பல்கலைக்கழகம்

நியூசிலாந்து நாட்டில் மொத்தம் 8 பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், விவசாயப் படிப்புக்கென்று பெயர்பெற்ற பல்கலை லிங்கன் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலையில் பலவித விவசாயப் படிப்புகள் விரிவான முறையில் வழங்கப்படுகின்றன.
நாட்டின் தலைசிறந்த விவசாய நிபுணர்களின் பங்களிப்போடு இத்தகையப் படிப்புகளை அப்பல்கலை வழங்கி வருகிறது.
லிங்கன் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள்
பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பற்றவர்கள் மற்றும் பல்கலையில் சேரும் முன்பாக, ஏதாவது படித்துவிட்டுச் செல்லலாமே என்ற எண்ணமுடையவர்களுக்காக இந்த சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
டிப்ளமோ படிப்புகள்
சில குறிப்பிட்ட பாடங்களுக்காக இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பட்டப் படிப்புகள்
நீங்கள் விரும்பும் துறையில் முன்னேறி செல்வதற்கும், விருப்பப் பாடங்களை இணைப்பதற்கும் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலைப் படிப்புகள்
ஹானர்ஸ் பட்டங்கள்
படிப்பில் நன்கு சாதித்தவர்கள், நான்காம் வருட படிப்பை நிறைவுசெய்வதற்கு இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
முதுநிலைப் பட்டம் மற்றும் பட்ட சான்றிதழ்கள் மற்றும் டிப்ளமோ படிப்புகள்
உங்களுக்கு விருப்பமான பாடங்களில் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த வகைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பட்டத்தில் திறமையை வளர்த்தும் கொள்ளலாம்.
முதுநிலைப் பட்டங்கள்
உங்களுக்கு விருப்பமான துறையில் ஆய்வுக் கட்டுரையை மேம்படுத்தவும். முனைவர் பட்டப் படிப்பிற்கு முன்பாக, இதுவே உயர்ந்தபட்ச தகுதியாகும்.
முனைவர் பட்டப் படிப்பு
முதுநிலைப் பட்டப் படிப்புகள் எந்தெந்த துறைகளிலெல்லாம் வழங்கப்படுகிறதோ, அந்த துறைகளிலெல்லாம் முனைவர் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இது ஒரு கூடுதல் 3 வருட படிப்பாகும்.
இப்பல்கலையானது, பலவிதமான துறைகளில், பலவிதமான படிப்புகளை வழங்கினாலும், விவசாயத் துறைப் படிப்புகளுக்கென்று இப்பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்குகிறது.
இப்பல்கலை வழங்கும் படிப்புகள்
விவசாயப் படிப்புகள்
லிங்கன் பல்கலை வழங்கும் விவசாயப் படிப்பானது, உலகளவில் புகழ்பெற்றதாகவும், இன்றைய உலகளாவியத் தேவையை ஈடுசெய்வதாகவும் உள்ளது. இதன்மூலம், உணவு தொடர்பான சுற்றுசூழல்கள், சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப் பிரச்சினைகள் குறித்த பரவலான அறிவு உங்களுக்கு கிடைக்கிறது.
படிப்பின் அமைப்பு
இளநிலை விவசாயப் படிப்பானது 3 வருட காலங்களைக் கொண்டது. அதேசமயம், நீங்கள் ஸ்பெஷலைசேஷன் செய்ய விரும்பினாலோ அல்லது ஹானர்ஸ் செய்ய நினைத்தாலோ, இளநிலை விவசாய அறிவியல் பாடத்தில் சேரவும். ஏனெனில், இது 4 வருட காலஅளவைக் கொண்டது.
இந்த இருவகைப் படிப்புகளுமே, தேவையான நடைமுறை அம்சங்களைப் பெற்றிருப்பவை மற்றும் இவற்றுக்கு 39 வாரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிராக்டிகல் பணிகள் தேவை.
உங்களின் பாடங்கள் என்ன?
குறிப்பிடத்தக்க மேஜர் பாடங்கள் எதுவும் இந்த இருவகை படிப்புகளிலும் கிடையாது. ஆனால் பலவிதமான அம்சங்களில், குறிப்பாக, பண்ணை மேலாண்மை, மண் அறிவியல், தாவர அறிவியல் மற்றும் விலங்கு அறிவியல் போன்ற துறைகளில் உங்களின் அறிவையும், திறமையையும் மேம்படுத்திக்கொள்ள இப்படிப்புகள் துணை புரிகின்றன.
மேற்கூறிய ஒவ்வொரு துறையிலும், நடப்பு ஆராய்ச்சி மற்றும் பரந்துபட்ட விவசாயத் தொழிலில் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றிய அறிவு உங்களுக்கு கிடைக்கப்பெறுகிறது.
ஆராய்ச்சி
லிங்கன் பல்கலையில் விவசாய அறிவியல் படிப்பை மேற்கொள்வதானது, நியூசிலாந்து நாட்டிலேயே, இத்துறையில் சிறப்பு பெற்ற நிபுணர்களிடம், சிறந்த அறிவுள்ளவர்களிடம் விவசாயப் பாடத்தைக் கற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். பயிர் ஆராய்ச்சி, மேய்ச்சல் நிலம், பயிர்களுக்கும் - சுற்றுச்சூழலுக்குமிடையேயான தொடர்பு, பூச்சிக்கொல்லி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, கால்நடை ஊட்டச்சத்து, மாலிக்யூலர் பயாலஜி, மண் மற்றும் சூழல் தரம் மற்றும் உயிரி உற்பத்தி போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி செய்யும் வசதி இப்பல்கலையில் உள்ளது.
மாற்று படிப்புகள்
முழுநேரப் படிப்பை மேற்கொள்ள விரும்பவில்லையென்றாலோ அல்லது அதற்கு நேரமில்லையென்றாலோ, உங்களுக்கு வேறுவிதமான படிப்புகளும் உள்ளன. அவை,
விவசாய டிப்ளமோ, பண்ணை மேலாண்மையில் டிப்ளமோ போன்ற படிப்புகள் உள்ளன. மேலும், விவசாய வணிகத்தின் மீது உங்களுக்கு ஆர்வமிருந்தால், இளநிலை காமர்ஸ்(விவசாயம்) பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.
இவைப்பற்றிய விபரங்களை அறிய www.lincoln.ac.nz/apply மற்றும் www.lincoln.ac.nz என்ற இணையதளங்களுக்குச் செல்லவும்.
இளநிலை வணிகப் படிப்பு(காமர்ஸ் - B.Com)
லிங்கன் பல்கலைக்கழகம் வழங்கும் B.Com படிப்பானது, நடைமுறை சார்ந்தது மற்றும் சில சிறப்புத் தன்மைகள் கொண்டது. இந்தப் படிப்பானது பரந்தளவிலான அம்சங்களைக் கொண்டுள்ளது. வணிகத்துறையில் நீங்கள் தைரியமாக கால் பதிக்க உங்களைத் தயார்படுத்துகிறது.
பாடத்திட்டம்
அக்கவுண்டிங், வேளாண் வியாபாரம், வணிக மேலாண்மை, பொருளாதாரம், நிதி, ஹோட்டல் மேலாண்மை, தனிப்பட்ட மேஜர், சர்வதேச வணிகம், மார்க்கெடிங் மற்றும் விநியோக தொடர் மேலாண்மை போன்ற பலவிதமான அம்சங்கள் பாடத்திட்டத்தில் உள்ளன.
கூடுதல் மேஜர் அல்லது மைனர்
ஒரு முக்கிய பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போதே, மனிதவள மேலாண்மை, நீடித்த வணிகம்(Sustainable business), சுற்றுலா மேலாண்மை, ஈவென்ட் மேலாண்மை, ஆபரேஷன் மேலாண்மை போன்ற பலவித கூடுதல் மேஜர் அல்லது மைனர் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.
இதைப்பற்றிய விரிவான விவரங்களுக்கு www.lincoln.ac.nz/majorsandminors என்ற இணையதளம் செல்க.
உங்களின் பாடங்கள்
இந்தப் படிப்பில் 24 பாடங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு பாடமும் அடிப்படை அறிவு மற்றும் திறமையை வழங்குவதாக உள்ளன.
மாற்றுப் படிப்புகள்
முழுநேரப் படிப்பை விரும்பவில்லையெனில்,
வணிகத்தில் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு போன்றவை உள்ளன.
வணிகப் படிப்பைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ள www.lincoln.ac.nz/apply மற்றும் www.lincoln.ac.nz என்ற இணையதளங்களுக்கு செல்லவும்.
விவசாயத்தில் இளநிலை வணிகப் படிப்பு
நியூசிலாந்து நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில், 40% விவசாயம் மற்றும் அவை சார்ந்த பொருட்களின் மூலம் கிடைக்கிறது. எனவே, இப்பல்கலையில் விவசாய வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பாடத்திட்டம்
இது 3 வருடகால படிப்பாகும். நீங்கள் 24 பாடங்களில் தேறியிருக்க வேண்டும் மற்றும் விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் 39 வாரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும்,
விவசாய மேலாண்மை, தோட்டக்கலை மேலாண்மை மற்றும் கிராமப்புற மதிப்பீடு போன்ற நிலைகளில் சிறப்புப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
கூடுதல் மேஜர் மற்றும் மைனர் படிப்புகள்
முழுநிலை பட்டப்படிப்பின்போது, இத்துறையில், மார்க்கெடிங், விநியோக சங்கிலி மேலாண்மை, சுற்றுசூழல் மேலாண்மை மற்றும் சுற்றுலா மற்றும் தாவர அறிவியல் போன்ற கூடுதல் மற்றும் மைனர் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
இப்படிப்புகள் பற்றிய முழு விபரங்களுக்கு www.lincoln.ac.nz/majorsandminors என்ற இணையதளம் செல்லவும்.
இந்த வேளாண் வணிகப் படிப்பில், கால்நடை, தாவரம், தோட்டக்கலை மற்றும் மண்அறிவியல் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வுசெய்யலாம்.
மேலும், ஸ்பெஷலைசேஷன் படிப்புகளாக, பண்ணை மேலாண்மைக் கோட்பாடுகள், பண்ணை மேலாண்மை பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல், பண்ணை மேம்பாடு மற்றும் முதலீடு, தோட்டக்கலை அமைப்புகள், தோட்டக்கலை மேலாண்மை, தோட்டக்கலை மேலாண்மை பகுப்பாய்வு, கிராமப்புற மதிப்பீடு, கட்டிட கட்டுமானம், நிலப் பொருளாதாரம், சொத்து சட்டங்கள் மற்றும் வளங்கள் மேலாண்மை சட்டம் போன்ற பலவிதமான படிப்புகள் உள்ளன.
இவைத்தவிர,
விவசாயம் மற்றும் பண்ணை மேலாண்மையில் டிப்ளமோ படிப்பு மற்றும் தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை மேலாண்மையில் டிப்ளமோ படிப்பு போன்ற குறுகியகால படிப்புகளும் உள்ளன.
இந்தப் படிப்புகள் பற்றிய விபரங்களுக்கு www.lincoln.ac.nz/apply மற்றும் www.lincoln.ac.nz என்ற வலைதளங்களுக்கு செல்க.
உணவுத் தொழில்துறையில் இளநிலை வணிகப் படிப்பு
மேற்கண்ட படிப்புகளில் இருந்த அம்சங்களைப்போல, இதிலும் பல அம்சங்கள் உள்ளன. கூடுதல் மேஜர்கள் மற்றும் மைனர்கள் உள்ளன.
இவைப்பற்றிய விபரங்களுக்கு www.lincoln.ac.nz/majorsandminors என்ற இணையதளம் செல்க.
இத்துறையில் குறுகியகால படிப்புகளாக சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இதைத்தவிர முக்கியப் படிப்போடு, துணைநிலைப் படிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மதிப்பிடுதல் மற்றும் சொத்து மேலாண்மையில் இளநிலை வணிகப் படிப்பு
இப்பிரிவில், குறுகியகாலப் படிப்புகள் மற்றும் துணைநிலைப் படிப்புகள் போன்றவை உள்ளன.
இவைத்தவிர, இதே அம்சங்களைக் கொண்ட,
* சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடுதலில் இளநிலைப் படிப்பு
* இளநிலை அறிவியல்(Bachelor of science) படிப்பு
* இளநிலையில் லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்(Landscape Architecture) படிப்பு
* விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மையில் இளநிலைப் படிப்பு
* சமூக அறிவியலில் இளநிலைப் படிப்புகள்
* மென்பொருள் மற்றும் தகவல்தொழில்நுட்பத்தில் இளநிலைப் படிப்பு(Software and information technology)
* சுற்றுலா மேலாண்மையில் இளநிலைப் படிப்பு
* திராட்சை வளர்ப்பு மற்றும் ஒயின் தயாரிப்பில் இளநிலைப் படிப்பு
* வேளாண்மை மற்றும் பண்ணை மேலாண்மையில் டிப்ளமோ படிப்புகள்
* தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை மேலாண்மையில் டிப்ளமோ படிப்புகள்
போன்ற பலவிதமான இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தைப் பற்றியும் தகவல் அறிய www.lincoln.ac.nz/majorsandminors மற்றும் www.lincoln.ac.nz/apply மற்றும் www.lincoln.ac.nz என்ற இணையதளங்களுக்குச் செல்லவும்.
இணைப்புப் படிப்புகள்
பள்ளிப்படிப்பை முடித்து இடைவெளி விட்டவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி பணிக்கு சென்றவர்கள் ஆகியோர், தாங்கள் விரும்பியத் துறைகளில் மேற்படிப்பைத் தொடர, இதுபோன்ற இணைப்புப் படிப்புகள் துணைபுரிகின்றன.
அவை,
* அடிப்படை படிப்பில் சான்றிதழ்(Certificate in Foundation course)
* பல்கலைக்கழகத்திற்காக தயார்படுத்தலுக்கான சான்றிதழ் படிப்பு(Certificate in University preparation)
* வணிகம் மற்றும் இயற்கை வளத்தில் சான்றிதழ் படிப்பு
போன்ற பலவித படிப்புகள் உள்ளன.
இவற்றைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.lincoln.ac.nz/apply மற்றும் www.lincoln.ac.nz என்ற இணையதளங்களுக்குச் செல்க.
ஆங்கிலப் பயிற்சி
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் அளவிற்கு பலருக்கு ஆங்கில மொழிப் புலமை இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கான பலவித பயிற்சிப் படிப்புகளை லிங்கன் பல்கலை நடத்துகிறது.
இப்படிப்புகளைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள www.lincoln.ac.nz/english என்ற இணையதளம் செல்க.
மாணவர் பரிமாற்றத் திட்டம்
இப்பல்கலையில் மாணவர் பரிமாற்றத் திட்டங்களும் உண்டு. அதன்படி, இப்பல்கலையுடன் ஒப்பந்தத்திலுள்ள இதர பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள், 1 அல்லது 2 செமஸ்டர்கள், லிங்கன் பல்கலையில் படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இம்மாணவர்கள் தங்களின் சொந்தப் பல்கலைக்கழகத்தில் என்ன கட்டணமோ, அதைக் கட்டினால் போதும். மற்றபடி, வேறு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
இதுபற்றி மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.immigration.govt.nz என்ற இணையதளம் செல்க.
லிங்கன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தல் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள, www.lincoln.ac.nz/application என்ற இணையதளம் செல்க.
இப்பல்கலையில் படிக்கும்போது, எங்கேயெல்லாம் தங்கலாம் என்ற தகவல் விபரம் மிக மிக முக்கியமானது. அவைப் பற்றி அறிந்துகொள்ள www.lincoln.ac.nz/accomodation என்ற இணையதளத்தைக் காணவும்.
உதவித்தொகை
லிங்கன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இவைப்பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள www.lincoln.ac.nz/scholar என்ற இணையதளத்தை அணுகவும்.
இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான முறையான போக்குவரத்து, வேலைவாய்ப்பு உதவி, பழக்கப்படுத்தல் நிகழ்ச்சிகள், நூலகம், உணவகங்கள், கோல்ப் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பலவகை வசதிகள் உள்ளன.
லிங்கன் பல்கலைக்கழகத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும், வகைப்பிரித்து தெளிவாக அறிந்துகொள்ள www.lincoln.ac.nz என்ற இணையதளம் செல்லவும்.

No comments:

Post a Comment