Saturday, 12 May 2012

கண்ணாடி


கண்ணாடி என்பது பற்றாக்குறை உள்ள பொருள். இதனை மறுசுழற்சி செய்வது எளிது.எத்தனையோ பேக்கிங் சாதனங்கள்
வந்துவிட்டபோதும் கண்ணாடிக்கு உள்ள மதிப்பும் தேவையும் வளர்ந்து கொண்டேதான் போகிறது. கண்ணாடி பயன்படுத்தி செய்யப்படும் பொருள்களில் மருத்துவம் வேதிப்பொருள் போன்ற துறைகளில் தேவை அதிகம். காரணம் கண்ணாடி பெட்டிகளில் அனுப்பப்படும் எதுவும் கெட்டுப்போவதில்லை. இந்த துறையில் பல வெளிநாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்த துறையில் நாமும் பயிற்சியுடன் கூடிய முயற்சி செய்து படித்து பயிற்சி பெற்றால், அதிக பொருள் ஈட்டுவதோடு நமது நாட்டையும் கண்ணாடித் துறையில் முன்னேற்றலாம்.

கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். ஆங்கிலத்தை எழுதி படிக்கும் அளவு அறிவுபோதுமானது. ஹிந்தி தொpந்திருந்தால் நல்லது.


பயிற்சி காலம்


ஒவ்வொரு பயிற்சியும் ஆறுமாத காலம் நடத்தப்படுகிறது. இரண்டு குழுக்களாக தேர்வு செய்து நடத்துகிறார்கள். மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வாரம் ஒரு குழுவாகவும் செப்டம்பா; முதல் வாரம் தொடங்கி பிப்ரவாp இறுதி வரை ஒரு குழுவாகவும் இரண்டு
குழுக்களாக பயிற்சி அளிக்கிறார்கள். கண்ணாடி குழம்பை ஊதும் பயிற்சியும் இதே காலப்படி நடத்துகிறார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூபாய் 1500.

விண்ணப்பிக்கும் முறை


மார்ச் மாதம் ஆரம்பிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பித்தால் பிப்ரவாரி  இரண்டாவது வாரத்திற்குள் விண்ணப்பம் அனுப்பி விட வேண்டும். செப்டம்பர் மாத பயிற்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே விண்ணப்பம் அனுப்பி விட வேண்டும். பயிற்சி கட்டணததை வங்கி வரையோலையாக செலுத்த வேண்டும். வரையோலையை முதன்மை இயக்குநர் கண்ணாடி தொழில் வளர்ச்சி மையம் என்றபெயருக்கு பெறப்பட வேண்டும். படித்து முடித்தபின் உள்ள வாய்ப்பு காத்திருக்க பொறுமை உண்டென்றால் தாமதமானாலும் திறமையை வைத்து முன்னுக்கு வர ஏற்ற தொழில் நிரந்தர வேலையும் கிடைக்கும். அறிவியல் உதவியாளர் என்ற வகையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கும் போகலாம். அறிவியல் சாதனங்களை தயாரிக்கும் தொழிலையும் செய்யலாம். இது பற்றிய அதிக தகவல்களைப் பெற

Centre of the Development of Glass Industry
A-1/1 Industrial Area
Jalesar Road
Firozabad 283203
Uttarpradesh

No comments:

Post a Comment