அடையாத மன உறுதி இது போன்ற குணாதிசயங்களை பெற்றிருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர். நீங்கள் வணிகமுறை விமானி ஆவதற்கு மாணவ விமானி அனுமதி. துனியா
விமான அனுமதி, வணிகமுறை விமானி அனுமதி என்ற மூன்ற நிலைகளை கடக்க வேண்டும்.
முதலில் மாணவ விமானி அனுமதியை ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கிவரும் பிளையிங் கிளப்புகள் தேர்வு நடத்தி தருகின்றன. இந்த தேர்வில் வெறறி பெறுவதற்கு விமான பயண விதிமுறைகள்
பறப்பதற்கு தேவையான காலநிலை அறிவியல், வானத்தில் வழிகண்டு விமானத்தை செலுத்தும் விதம், விமான தொழில் நுட்பம் ஆகியவற்றை படித்திருக்க வேண்டும்.
தகுதி:
10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், 16 வயது நிரம்பியிருக்க வேண்டும். உடல்நல மருத்துவ சான்று அவசியம். வங்கி ஒன்று ரூ. 10ஆயரத்திற்கான உத்திரவாதம் தரவேண்டும்.
தனியார் விமான அனுமதி
இதில் செய்முறை பயிற்சி அவசியம் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பயிற்றுனருடன் சேர்ந்து பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் 15 மணி நேரம் பறந்த பிறகு உங்களை தனியாக பறக்க அனுமதிப்பார். இதிலும் எழுத்துத் தேர்வு உண்டு.
இந்த பயிற்சிக்கு 17 வயது முடிந்து இருக்க வேண்டும். மருத்துவ சோதனையும் அவசியம். வணிக முறை விமான அனுமதி
குறைந்தது 250 மணிநேரம் பறந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்வில் கணிதம் மற்றும் இயற்பியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மருத்துவபரி சோதனையும் வென்றாக வேண்டும்.
எங்கே பயிற்சி பெறலாம்?
உள்நாடு அல்லது வெளிநாடுகளில் பொருளாதார வசதிக்கேற்ப பயிற்சி பெறலாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள ஃபிளையிங் கிளப்புகள் மூலமோ அல்லது ரேபரேலியில் உள்ள இந்திரா காந்தி தேசிய வான் பயிற்சி மையத்திலும் சென்னையிலும் பயிற்சி பெறலாம்.
எவ்வளவு செலவு ஆகும் இது செலவு அதிகம் வரும் படிப்பு. ஆனால் வருமானம் அதிகம் என்பதனால் செய்யும் செலவு வீணாகாது. ஒற்றை இஞ்சின் விமானத்தில் பயிற்சி பெறுவதற்கு 12 மாத பயிற்சிக்கு ரூ. 4.5 லடசம்
செலவு ஆகும். பல இஞ்சினக்ள் பொருத்திய விமானப்பயிற்சிக்கு (18 மாதப் பயிற்சிக்கு_ ரூ. 5 லட்சம் செலவு ஆகும். ஆனால் இந்த கட்டணம் விகிதம் மாறுபடலாம்.
பயிற்சியளிக்கும் இடங்கள்
No comments:
Post a Comment