ஏர்ஹோஸ்டஸ் என்றாலே தட்டில் சாக்லெட்டுகளையும் உணவுப் பதார்த்தங்களையும் தான் ஏந்தி வர வேண்டும் என்பதில்லை.
அதற்கு மேலும் பல்வேறு பொறுப்புக்கள் உள்ளன. விமானத்தில்பயணம் செய்வோருக்கு ஏற்படும் தலைவலியிலிருந்து பிரசவம் வரை முதலுதவி செய்ய ஏர்ஹோஸ்டஸ்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
தகுதிகள்
இப்பணியில் சேர ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் பணியில் சேரும் போது திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். பணியில் சேர்ந்த பின் திருமணம் செய்து கொள்ளலாம்.
வயது, உயரம், எடை ஆகிய மூன்றும் தேவையான விகிதத்தில் இருக்க வேண்டும். இந்தி சரளமாகப் பேச தெரிய வேண்டும். ஆங்கிலமும் தெரிய வேண்டும். கண் பார்வை 6 ன் கீழ் 6 என்ற விகிதத்தில் இருத்தல் அவசியம். நிறக்குருடு(Colour Blindness) இருக்கக்கூடாது. இனிமையான தோற்றம் தேவை. விமானத்தின் அளவைப் பொருத்து ஏர்ஹோஸ்டஸ், பிளைட் பர்சரின் எண்ணிக்கை அமையும்.
பயிற்சி
தேர்வானவர்களுக்கு 6 வாரப் பயிற்சி அளிக்கப்படும். இதில் பயணிகளின் சைக்காலஜி, உணவு,தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படும்.ஊதாரணமாக விமானத்தில் விஐபிக்கள், முதியேர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியேரிடத்தில் விமானப் பணிப்பெண்கள் சிறப்புக் கவனம் செலுத்துவது எப்படி என்பது போன்ற விஷயங்கள் பயிற்சியின் போதே கற்றுக் கொடுக்கப்பட்டுவிடும். பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதுதான் விமானப்பணிப்பெண்களின் முக்கிய கடமை. மேலும் அவசர
காலங்களில் நிலைமையைச் சமாளிப்பதும் அவர்களின் பொறுப்பு.
சம்பளம் அனைத்துப்படிகளையும் சேர்த்து ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் பிளைட் பர்சருக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ. 12 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஊதியத்தைப் பொருத்தவரை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இதர படிகள், பயணம் செய்வதில் சலுகை போன்ற
வசதிகளும் உண்டு. குண்டாகக் கூடாது இந்த வேலையில் மிக முக்கியமானது உடல்நலத்தைப் பேணிக்காப்பது தான். எடை அதிகமாகிவிட்டால் முதலில் எச்சரிக்கை தரப்படும். எடையைக்
குறைப்பதற்கு போதிய கால அவகாசமும் தரப்படும். அதையும் மீறி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால் தொடர்நது வேலையில் இருக்க முடியாது.
No comments:
Post a Comment