Thursday, 3 May 2012

ஜெர்மன் கல்வி முறை

ஐரோப்பா கண்டத்தின் மத்தியில் அமைந்திருப்பது ஜெர்மன் நாடாகும். இது சுதந்திர நாடு. எப்போதும் குளிர்ந்த தட்பவெப்பநிலையே இங்கு நிலவும்.

கல்வித் தரம்
ஜெர்மனியின் கல்வித் தரம் சர்வதேச அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு உதவி புரியும் அளவிற்கு கல்வித் தரம் மிக்கது. தொழிற்சாலைகள், நிறுவனங்களில் செயல்முறை பயிற்சியுடன் கூடிய படிப்புகள், பல்வேறு படிப்புகள் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் கல்விக் கட்டணம் நடுநிலையாக இருக்கும். மாநில நிதியுதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. இவற்றில், எந்த கல்விக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தனியார் பல்கலைக்கழகங்களும், மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலிக்கின்றன.
தங்கும் இடம், போக்குவரத்து, உணவிற்கான செலவுகளும் சாதாரணமாகவே இருக்கும். ஜெர்மனி, மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாகும்.
கல்வி முறை
ஜெர்மனியில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2,40,000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 5000 பேர் இந்திய மாணவர்களாவர். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் நல்ல முறையில் அளிக்கின்றன.
கல்வி நிறுவனங்கள்
ஜெர்மனியில் ஒட்டு மொத்தமாக 338 கல்வி நிறுவனங்கள் உயர் கல்வியை அளிக்கின்றன. 118 பல்கலைக்கழகங்களும், 52 கல்லூரிகளும் இதில் அடக்கம். ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்து மேலும் விவரங்களை.. இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இங்கு படிப்பு மட்டுமல்லாமல், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும், செயல்முறை படிப்புகளுக்கும் அதிக ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சி  அளிக்கும் நிறுவனங்கள், பல துறைப் படிப்புகளை அளிக்கும் கூட்டு பல்கலைக்கழகங்கள், மருத்துவம், கால்நடை மருத்துவக் கல்வியை அளிக்கும் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், சர்வதேச பட்டப்படிப்புகளை அளிக்கும் நிறுவனங்கள் என பல்வேறு வகையான கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.
கற்பிக்கும் மொழி
ஜெர்மனியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில மொழியில்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாகும். ஜெர்மன் தெரியாமல் இருந்தாலும் ஜெர்மனியில் கல்வி பயிலலாம்.
தேவையான சான்றுகள்
ஜெர்மனியில் உயர் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், ஜெர்மன் தூதரகத்தில் தேவையான சான்றுகளுடன் செல்ல வேண்டும்.
அதாவது, பாஸ்போர்ட், பாஸ்போர்ட்டின் நகல்கள்
ஜெர்மனியில் உள்ள உயர்கல்வி நிலையத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்
மாணவரது இறுதியாண்டு கல்வித் தேர்ச்சி சான்றிதழ்
ஜெர்மனியில் கல்வி பயில போதுமான நிதி இருப்பதற்கான ஆதாரம்
ஜெர்மன் பல்கலையில் இருந்து வந்த சேர்க்கைக்கான அனுமதி சான்று அல்லது நீங்கள் விண்ணப்பித்திருக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதற்கான சான்று அல்லது, கல்வி நிறுவனத்திற்கு அனுப்பிய விண்ணப்பத்துடன் சேர்த்த சான்றிதழ்களின் நகல்களை அனுப்ப வேண்டும்.
கல்விச் சேர்க்கைக்குத் தேவையான சான்றுகள்
பொதுவாக ஜெர்மனி கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வும் நடத்தப்படுவதில்லை, கல்விக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவதே அவசியமாகும்.
இந்தியாவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால், ஜெர்மனி பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பு சேரலாம்.
ஜெர்மனியில் பள்ளிப் படிப்பு என்பது 13 ஆண்டுகள். இதனால் இந்தியாவில் 12 ஆண்டுகள் படித்து முடித்ததை ஜெர்மன் கல்வி முறை ஏற்றுக் கொள்வதில்லை, ஜெர்மனியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும் எனில், ஓராண்டு இணைப்புக் கல்வியை இந்திய மாணவர் பயில வேண்டும். அதன் பிறகு, நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியதும் அவசியம். அல்லது இளநிலை பட்டப்படிப்பில் 2 ஆண்டுகளை இந்தியாவில் முடித்த அல்லது ஐஐடியால் நடத்தப்படும் கூட்டு நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக இளநிலை பட்டப்படிப்பில் சேரலாம்.
பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு பொதுவான தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
விசா முறை
ஜெர்மனியில் மாணவர்கள் விசா நடைமுறைகள் முடிந்து விசா கிடைக்க 2 மாதம் ஆகும். பொதுவாக 3 மாதங்களுக்குத்தான் விசா வழங்கப்படும். பிறகு தான் அது நீடிக்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையானவை
விசா விண்ணப்பப் படிவம்
பல்கலைக்கழகத்தின் அனுமதிக் கடிதம்
இளநிலை பட்டப்படிப்பின் சான்றிதழ்
மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்
நிதி ஆதாரம் (3,50,000-4,00,000)
புகைப்படம்
பாஸ்போர்ட்
மருத்துவச் சான்று
விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை மையத்தை டி.ஏ.ஏ.டி. என்று அழைக்கிறார்கள்.
இந்தியாவில், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய இடங்களில் டி.ஏ.ஏ.டி. மையம் உள்ளது.
சென்னை முகவரி
டி.ஏ.ஏ.டி. தகவல் மையம்
சி/ஓ. மேக்ஸ் முல்லர் பவன்
4/14, ரட்லண்ட் கேட்
சென்னை - 600 006
தொலைபேசி - 044 - 28331442

1 comment:

  1. கல்வி சம்மந்தமாக தகவல் அனைத்தும் ஒரே தளத்தில் உள்ளது சந்தோசமாக இருக்கிறது.இந்த கல்விதிறன் இணையத்துக்கு நன்றிகள் ஆயிரம்

    ReplyDelete