இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம் வரிசையில் அதற்க்கு இனையாக கல்வியிலும் தரத்திலும் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்று இராஜஸ்தான் மாநிலம் பிலானியில்
உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS) என்ற கல்வி நிறுவணம் ஆகும்.
பிலானி, கோவ மற்றும் ஹைதராபாத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனம் ME, M.Pharm, MBA மற்றும் Ph.D ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதி :
ME, M.Pharm மற்றும் MBA போன்ற படிப்புகளுக்கு விண்ணபிக்க மாணவ மாணவிகள் இளநிலை(BE / B.Pharm / BBA or Equivalent) பட்டப்படிப்பில் 60சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Ph.D போன்ற படிப்புகளுக்கு முதுநிலை (ME / M.Pharm / MBA or Equivalent) பட்டபடிப்பில் 60சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ள மாணவ மாணவிகள் www.bitsadmission.com <http://bitsadmission.com/> என்ற இனையதளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பத்தையும் ரூபாய் 1600 விண்ணப்ப படிவ தொகை செலுத்திய ஆதாரத்தையும் பிரிண்ட் எடுத்து The Admission Officer, BITS Pilani, Pilani - 333031(Rajasthan) என்ற முகவரிக்கு 23.05.2012 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
ரூபாய் 1500விண்ணப்ப படிவ தொகை செலுத்தும் முறை பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தருணத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
தேர்வு முறை :
ME , M.Pharm மற்றும் MBA படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 3மற்றும் 4ஆம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நுழைவு தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் தேதி இராஜஸ்தான் மாநிலம் பிலாணியில் நேர்முக தேர்வு நடைபெறும்.
நுழைவு தேர்விற்க்கான பாடதிட்டம், கேள்வி முறை பற்றி அறிய என்ற இனையதளத்தை பார்வையிடவும்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.05.2012.
தேர்வு நடைபெறும் இடம் அறிவிப்பு : 27.05.2012.
தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய : 30.05.2012 - 02.06.2012
ஆன்லைன் நுழைவு தேர்வு : 03.06.2012 & 04.06.2012
ME /M.Pharm சேர்க்கை குறிந்த அறிவிப்பு : 09.06.2012.
MBA சேர்க்கைகான நேர்முக தேர்வு (GD) : 27.07.2012.
தேர்வான மாணவர்களுக்கான சேர்க்கை : 28.07.2012.
No comments:
Post a Comment