மனித உடலில் குறிப்பிட்ட பாகங்கள் சீரற்ற சில உடல் நலக்குறைவுக் காரணங்களால்,எதிர்பாராமல்
செயலிழந்து போகின்றன. குறிப்பாக உடலின் ஒரு பாகம் (கால் முதல் வாய் வரை) முழுவதும் முடக்கப்பட்டுவிடுகின்றது. அவயங்கள் செயலிழந்து விடுகின்றன. அத்தகைய வேதனைகளிலிருந்து விடுதலை தர உதவுவதே பிசியோதெரப்பியாகும். ஒருவர் பிசியோதெரபிஸ்ட் ஆக வேண்டுமானால் நான்கு வருட ஃபிசியோதெரப்பி பட்டப் படிப்பை அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். பின்னர் ஃபிசியோதெரபி
துறையில் மருத்துவ மனையில் ஆறு மாதம் பயிற்சியும் பெற வேண்டும்.
கல்வித்தகுதி:
+2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் - விலங்கியல் படித்து 50 விழுக்காடுக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள் :
1. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை பெறலாம்.
2. சொந்தமாகவும் கிளினிக் நடத்தலாம்.
3. வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment