Friday, 18 May 2012

செக்ரட்டரிஷிப் படிப்பு

நல்ல வேலை வாய்ப்புகளை கம்பெனி செக்ட்டரிஷிப் படிப்பு வழங்குகிறது. ஐம்பது லட்சம்
ரூபாய்க்கு மேல் மூலதனம் கொண்ட தொழில் நிறுவனங்களில் கண்டிப்பாக கம்பெனி செக்ட்டரி நியமிக்கப்பட வேண்டும் என்பது கம்பெனி சட்ட விதி. ஆனால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செகட்டரிஷிப் படித்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் கம்பெனிசெகட்டரி பணியில் சே முடியும்.ஃபவுண்டேசன், இன்டர்மீடியட்,ஃபைனல் என 3 கட்டங்களைக் கொண்டது கம்பெனிட்டரிஷிப் படிப்பு.

கல்வித் தகுதிகள்


பிளஸ் 2 முடித்தோர் இதில் சேலாம். வயது 18க்கு மேல் இருப்பது அவசியம். இப்படிப்பை முடிக்க குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் ஆகும். பி.காம்., பி.ஏ., கார்ப்பரேட் செக்ட்டரிஷிப் படித்தவர்கள் ஃபவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டியதில்லை.நேμடியாக இன்டர் தேர்வு எழுதலாம்.

அதே போல் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் வணிகவியல் டிப்ளமோ படித்தவர்கள், இன்ஸ்டிட்யூப் ஆஃப் இந்தியா அல்லது இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா ஃபைனல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தொடக்க நிலைத் தேர்வு எழுதத் தேவையில்லை.பிளஸ் 2 படித்தவர்கள் தொடக்க நிலைத் தேர்வு எழுத வேண்டும்.இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து இன்டர் தேர்வு எழுத வேண்டும்.

இத்தேர்வுக்கு ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பெயரைப்
பதிவு செய்து கொள்ளலாம். ஜூன், டிசம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும்.
பதிவு செய்து 6 மாதங்கள் கழித்த பிறகுதான் இத்தேர்வை எழுத முடியும். இன்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 மாதங்களுக்குப் பிறகு ஃபைனல் தேர்வு.

எங்கு படிக்கலாம்?
பல தனியார் கல்வி நிறுவனங்களும்,சில பல்கலைக்கழகங்களும் இது குறித்த படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு இன்ஸ்டிட்யூப் ஆஃப் கம்பெனி செகட்டரிஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் வேலை வாய்ப்பு பெற உதவுகிறது.

மேலும் விபரங்களுக்கு:
இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் கம்பெனி
செகட்டரிஸ் ஆஃப் இந்தியா, தென்னிந்திய மண்டல அலுவலகம்,
4, வீட்கிராப்ஸ்ட் சாலை,நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034.

No comments:

Post a Comment