Friday, 18 May 2012

மண்ணிலிருந்தே விண்ணை படிக்கலாம்


கணிதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இது உங்களுக்கு ஏற்ற படிப்பாகும்.
இது விண்ணைப் பற்றிய படிப்பு. அதாவது வானத்தில் உள்ள நட்சத்திங்கள், கோள்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த படிப்பாகும். கற்பனைத் திறமையும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கைகயுடனும் ,
இத்துறையில் காலடி எடுத்து வைத்தால் மிகவும் சிறப்பான எதிர்காலம் உண்டு. விண்கோள்களின் சுற்றுப்பாதை, ஈர்ப்புவிசை,கடல் ஏற்ற இறக்கம், செயற்கை கோள்கள் போன்றவை இப்பிரிவில் வரும். இப்படிப்பின் பாடங்கள் நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். இது மிகவும் சவால்கள் நிறைந்த துறை என்பதால் இந்தத் துறையில் மற்ற
துறைகளைப் போன்று அதிகம் போட்டி கிடையாது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இத்துறையில் புதுப்புது
ராய்ச்சிகளுக்கு வாய்ப்பு வளர்ந்து கொண்டே போகிறது. மேலும் இத்துறையைச் சார்ந்த விண்ணியல் கழகம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் விண்ணியல் தொடர்பான போட்டி ஒன்றை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் இளம் விஞ்ஞானிகளைப் பல உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்து விண்ணியல் குறித்த பயிற்சியை அளிக்கிறது.


கல்வித் தகுதிகள்
இத்துறையில் பட்டயப் படிப்பு,பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி
படிப்பு வரை உள்ளது. பொதுவாக இத்துறையில் பட்டப் படிப்பு சேர்வதற்கு
+2வில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் உள்ள மதிப்பெண் அதிகம்
கவனிக்கப்படும். பட்டப் படிப்புகளில் மற்றும் பட்ட மேற்படிப்புகளில், விண்
இயக்கவியல், பிபஞ்ச இயல், விண்இயற்பியல் போன்ற தனித்தனிப்
பாடப்பிரிவுகள் உள்ளன.



எங்கு படிக்கலாம்?
இப்பிரிவு பயிற்றுவிக்கப்படும்
கல்வி நிறுவனங்களில் சில :


B.Sc.,
1. Madras Univeristy, Chepauk,
Chennai - 05.



2. Planaterium Technology, Usmania
University, Hyderabad, Andhrapradesh -
500 007.


3. Astrophysics Shivaji University,
Kolhpur - 616 004.


M.Sc.,
1. Astronomy Swamy Ramanan
Teerh, Marathwadas University, Nanded
- 431 603.


2. Space Physics, Andhra University,
Visakappatinam - - 530 003.
Andhrapradesh
3. Madras University, Chepauk,
Chennai - 05.



வேலை வாய்ப்பு
வான் ஆராய்ச்சி நிலையங்களில் நல்ல வேலை வாய்ப்பு உண்டு. பல
அறிவியல் பூங்காக்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன. இது போன்ற
இடங்களில் வேலைக்குச் சேவாய்ப்பு உள்ளது.ராணுவம் போன்ற
துறைகளில் விண்ணியலாரின் சேவை மிகவும் அதிகம்.






No comments:

Post a Comment