Thursday 31 May 2012

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஐ.டி.ஐ., காலி இடங்கள்


உத்திரப் பிரதேச மா நிலத்தில் லக்னோவிற்கு மிக அருகில் அமைந்துள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., 9001:2000 தரச் சான்று பெற்ற ஒரு நிறுவனமாகும். இத்தாலி நாட்டின் இன்னோசெண்டி நிறுவனத்தில் இருந்து உரிமம் பெற்று இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று கனரக வாகனங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் பல்வேறு ஐ.டி.ஐ., படிப்புகளைப் படித்தவர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.


பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் ஆகிய பிரிவுகளில் தலா 10 இடங்களும், டீசல் மெக்கானிக் மற்றும் மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக் பிரிவுகளில் தலா 15 இடங்களும், வெல்டர் பிரிவில் 14 இடங்களும், எலக்ட்ரீசியன் பிரிவில் 7 இடங்களும், ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் 4 இடங்களும், பவுண்டரி மேன் மற்றும் பெயிண்டர் பிரிவுகளில் தலா 3 இடங்களும், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெக்கானிக் டிராப்ட்ஸ்மேன், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., கிரைண்டர் மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளில் தலா 2 இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தேவைகள்: மேலே கூறப்பட்டுள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.04.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அளவிலான படிப்பை முடித்துவிட்டு மேலே உள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை 2009க்குப் பின்னர் முடித்திருப்பது கட்டாயத் தேவையாகும்

இதர தகவல்கள்: ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஐ.டி.ஐ., காலி இடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் மாதம் ரூ.2 ஆயிரம் வரை ஸ்டைபண்டுடன் முதலில் பணி புரிய வேண்டியிருக்கும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் பயோ-டேட்டா படிவத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, இதர சான்றிதழ்களின் நகல்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Dy. Manager ( Estt. & Rectt.),
Scooters India Limited, Post Bag No.23,
Sarojini Nagar,
Lucknow 226008.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 15.06.2012
இணையதள முகவரி: www.scootersindia.com/html/req_iti_skill_dev.pdf 

No comments:

Post a Comment