Thursday 31 May 2012

அரசு ஆதார வளங்கள்



ஆரம்பப்பள்ளிகளில் சமூகத்தினரின் பங்களிப்பு
மேற்குவங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஸ்வநிர்வார் அமைப்பு நடத்திய ஆய்வுகள்
இந்தப் பகுதியில் பணியாற்றிய ஸ்வநிர்வார் என்ற தன்னார்வ அமைப்பு தயாரித்த ஆய்வறிக்கை உள்ளூர் சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் கல்வி, அதன் தாக்கம் ஆகியவற்றில் பெற்றோர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசாங்கப் பள்ளிக்கூடங்களிலும் இதுபோன்றப் பங்கேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமுதாயம் மற்றும் உள்ளூர் மக்களின் சுற்றுச்சூழல் குறித்துப் பள்ளிப் பாடத்திட்டத்தில் எந்தளவுக்கு இடம் பெற்றுள்ளது என்ற கேள்வியும் இந்த ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது.

சர்வ சிக்ஷா அபிக்ஞான் (SSA) :அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்பதில் வெற்றி பெறுவதற்காக இந்திய அரசு வகுத்துள்ள முன்னோடித் திட்டம் குறித்தத் தகவலை இது வழங்குகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் இலக்குகளும் அதற்கான வியூகங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.  இந்தியாவில் தற்போதையக் கல்வி நிலவரம் தொடர்பான தகவல்களையும் இது விவரிக்கிறது.
அனைவருக்கும் கல்வி பற்றிய தேசிய ஆவணங்கள் அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை நிறைவேற்றும் வகியில் தீட்டப்படும் கொள்கைகள் மற்றும் இந்திய கல்வி துறையின் நிலவரம் குறித்தும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 http://www.unesco.org/wef/countryreports/india/contents.html

இந்திய அரசின் கல்வித்துறை :மாநிலங்களில் காணப்படும் கல்விநிலை குறித்தத் தகவலை இந்தத்துறை வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் தேசிய கல்விக் கொள்கைக் குறித்த ஆவணங்களையும் புள்ளி விவரங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://www.education.nic.in/
கல்வித் தொடர்பாகத் திட்டமிடுதல் மற்றும் கல்வித்துறை நிர்வாகத்திற்கான தேசிய அமைப்பு (NUEPA) : பயிற்சிக் கையேடுகள், கட்டுரைகள், கல்வித் தொடர்பான உரிய ஆவணங்கள் ஆகியவற்றை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இனி நடைபெற உள்ளக் கல்வி தொடர்பான நிகழ்வுகளையும் இது பட்டியலிட்டுள்ளது.
http://www.nuepa.org
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (NCERT) :பெண்கள் கல்வி கணக்கெடுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றுடன் உண்டான இணைப்பு சேவை உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களை இது வழங்குகிறது.
http://www.ncert.nic.in
தேசிய திறந்தவெளி பள்ளித்திட்ட அமைப்பு (NIOS) :விண்ணப்பப் படிவங்கள் அனுப்பப்படுவதற்கான கடைசித் தேதி போன்ற முக்கியமான தேதிகளை இணையதளம் வாயிலாக இது வழங்குகிறது.தங்களுடைய பதிவு எண்ணை இணையதளத்தில் குறிப்பிட்டு சேர்க்கை நிலவரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.  மதிப்பீடு முறை, தொழில் கல்வித் திட்டங்கள் மற்றும் அதற்கு உதவிகரமான சேவைகள் உள்ளிட்டப் பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.
http://www.nios.ac.in/

No comments:

Post a Comment