Thursday 31 May 2012

உலக அளவிலான ஆதார வளங்கள்


கல்வித் திட்டங்களுக்கான சர்வதேச அமைப்பு (IIEP) : கல்விக்கானத் திட்டமிடல் மற்றும் நிர்வாகம், IIEP வழங்கும் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள், ஆய்வு மற்றும் இணையதள வெளியீடுகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://www.unesco.org/iiep/

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ - வின் கல்வி தகவல் சேவை : இந்த அமைப்பின் கல்வித் திட்டங்கள் மற்றும் வெளியீடுகள் குறித்த முக்கியமானத் தகவல்களை இது வழங்குகிறது. இணையதளத்தின் மற்ற கல்வி சர்வர்களுடனும் யுனெஸ்கோவின் கல்விதிட்ட கூட்டமைப்புகளுடனும் இணைப்பு சேவையை வழங்குகிறது. இந்த இணையதளத்தில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. உடனுக்குடன் இது அப்டேட் செய்யப்படுகின்றன.
 http://www.education.unesco.org/index.html

அனைவருக்கும் கல்வி அமைப்பு : தேசிய அளவிலான அறிக்கைகள், தற்போதைய நிலவரம் குறித்தத் தகவல்கள், வெளியீடுகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திமடல்கள், இனி நடைபெறவுள்ளக் கூட்டங்கள், மாநாடுகள் குறித்தத் தகவல்களை அறிந்துகொள்ள இது உதவுகிறது.
http://www.unesco.org/education/efa/index.shtml

அனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்த உரகளவிலான கண்காணிப்பு அறிக்கை 2009: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் பயனை முழுவதுமாக பெறமுடியாத மக்கள், அவற்றுக்கான காரணங்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், செயல்படக்கூடிய கொள்கைகள், ஆகியவை பற்றிய விளக்கம் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
http://www.unesco.org/en/education/efareport/

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் : ( யுனிசெஃ ) உலகமெங்கும் உள்ள குழந்தைகள் குறித்து மல்டி மீடியா வடிவத்தில் இது தகவல்களை அளிக்கிறது.  மாணவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் ஆதாரவளங்கள் குறித்தத் தகவல்களையும் இது தருகிறது.
www.unicef.org

யுனிசெஃ -ன் உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை 2008
இவ்வறிக்கையில், தாய்மார்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் வளரும் குழந்தைகளின் நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த திட்டங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
http://www.unicef.org/publications/index_42623.html

உலக வங்கியின் கல்வி மைக்ரோசைட் : உலக வங்கி வெளியீடுகளின் முழுவடிவம் கல்வி வாய்ப்புகள் குறித்தத் தகவல்கள், வழிமுறைகள் குழந்தைப் பருவத்தின் ஆரம்பநிலை, பாலினம், திறன்வாயந்த் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள், முதியோர் கல்வி, பள்ளிகளின் ஆரோக்கியமான நிலை, கல்வி தொடர்பான புள்ளி விவரங்கள் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி வியூகத் திட்டங்கள், பிராந்திய அளவிலான தகவல்கள் மற்றும் இவைத் தொடர்பான இணைப்புகள் குறித்து உலக வங்கியின் கல்வித் திட்டப் பணியில் இடம் பெற்றுள்ளத் தகவல்கள் இதில் கிடைக்கின்றன.
http://www.worldbank.org/education/

சர்வதேச எழுத்தறிவு திரட்டு : சர்வதேச அளவிலான எழுத்தறிவு நிலவரம், அடிப்படைக் கல்வி தொடர்பான பல்வேறு தகவல்கள் ஆகியவை குறித்து இதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
http://www.literacyonline.org/

No comments:

Post a Comment