Thursday 31 May 2012

பயிற்சி மற்றும் அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளும் ஆதார வளங்கள்


ஆசிரியர் கல்வி பயிற்சிக்கான தேசிய அமைப்பு ( இந்தியா ) : இந்த இணையதளம் ஆசிரியர் பயிற்சி, விண்ணப்பங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான ஆதார வளங்களைக் கொண்ட கையேடுகளை வழங்குகிறது.
http://www.ncte-in.org

கல்வி இணையதளம் : ஆசிரியர்கள், ஆய்வு செய்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இவை சம்பந்தப்பட்டவர்களுக்கு இணையதள அரங்கம் அமைத்துத் தருகிறது.  இதன் மூலம் கலந்துரையாடல்கள், ஆரம்பக் கல்வியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பரிசீலனை மற்றும் கற்பதற்கான ஆதாரவளங்கள் மற்றும் சாதனங்கள் குறித்தத் தகவல்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
http://www.vidyaonline.net/

கற்பித்தல் மற்றும் கற்றல் குறித்த ஆலோசனைகள் ( யூனிசெஃப் ) :கற்பித்தல் மற்றும் கற்றல், விளையாட்டு, பிற நடவடிக்கைகள் மற்றும் மற்ற கற்பித்தலின் ஆதார வளங்கள் இவற்றைப் பற்றிய தற்போதைய நிலவரம் குறித்தக் கட்டுரைகள், கருத்துகள், ஆய்வுகள் ஆகியவற்றைப் பற்றிய தொடர் ஆதார வளங்களை வழங்குவதற்கான இணையமாக இது.
http://www.unicef.org/teachers/ideas.htm

நடவடிக்கை எடுத்தல் ( யூனிசெஃப் ) : மாணவர்களுக்குக் கற்பித்தலின்போது ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக கலந்துரையாடல், க்விஸ் நடத்துதல், சாதனங்கள் மற்றும் சில இணையவழி பிராஜெக்டுகள் இவற்றை இந்த இணையதளம் வழங்குகிறது.
http://www.unicef.org/teachers/action/index.html
  
ஐ.நா. அமைப்பு சைபர் ஸ்கூல் பஸ் : உலகளாவிய போதனை மற்றும் கற்றல் திட்டம் கல்வித்திட்டப் பயன்பாட்டிற்காகவும் ஆசிரியர் பயிற்சிக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள போதனைத் தொடர்பான தரம் வாய்ந்த விஷயங்களையும் செயல்முறைகளையும் வழங்குகிறது.
http://www.un.org/Pubs/CyberSchoolBus/index.html 

திறன் வாய்ந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் ( உலக வங்கி ) : உலகம் முழுவதும் உள்ள திறன் வாய்ந்த பள்ளிகள் தொடர்பான ஆய்வறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் திட்டங்கள் குறித்தத் தகவல்களைப் பெற உதவி செய்கிறது. பயிற்சியாளாகள், திட்ட மேலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு திறன் வாய்ந்தப் பள்ளிகளை உருவாக்குவதற்கான வழிவகைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும், ஆதார மையமாகவும் இது உதவுகிறது.
http://www.worldbank.org/education/est/

இந்திய மேம்பாடு  நுழைவாயில் :  உலக வங்கியின் சர்வதேச மேம்பாடு கேட்வே இணையதளத்தின் தேசிய அங்கமாக இந்த இணையதளம் அமைந்துள்ளது. இணையதள வழி விவாதங்கள், அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் மூலமாகப் பல்வேறு மேம்பாட்டு விஷயங்கள் குறித்தத் தகவல் ஆதாரங்களை இது வழங்குகிறது.
http://www.developmentgateway.org/countryprofile/index?country_iso=in

ஆசிரியர்கள் அரங்கம் :   இணையதளம் வாயிலாக ஆசிரியர்கள் தங்களுடைய யோசனைகளை, சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள இது வழிவகுக்கிறது. மேலும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
http://www.unicef.org/teachers/forum/index.html

No comments:

Post a Comment