Thursday 31 May 2012

குழந்தை உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு ஆதாரவளங்கள்


குழந்தைத் தொழிலாளா முறையைத் தடுப்பதற்கான உலகளாவிய முனைப்பு. செய்திகள் திரட்டுதல், இதில் ஈடுபடுவதற்கான ஆதார வளங்களையும் வழிமுறைகளையும் உருவாக்குதல்.
www.globalmarch.org  

உலகளாவிய கல்வி சீரமைப்பு ( உலக வங்கி ) : கல்வி சீரமைப்பு அடிப்படையில் உலகம் முழுவதும் காணப்படும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. கல்வித்திட்டத்தில் முறையான சீரமைப்புகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான ஆதார வளங்களையும், சாதனங்களையும் அடிப்படையானப் பல்வேறு முக்கியத் தகவல்களையும் இது வழங்குகிறது. இணையதளம் வழியாகத் தங்கள் அனுபவங்களைக் கொள்கை வகுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இணைப்புகளையும் இது வழங்குகிறது.
http://www.worldbank.org/education/globaleducationreform/  

குழந்தை உரிமைகள் தகவல் நெட்வொர்க் (CRIN) : குழந்தைகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட இது துணை நிற்கிறது. குழந்தையின் உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள விஷயஙகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது உறுதுணையாக உள்ளது.
http://www.crin.org/

கல்விக்கான உலகளாவிய இயக்கம் (GCE) :  உலக வங்கியின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் பல்வேறு தன்னார்வ அமைப்பு உறுப்பினர்கள், வல்லுநர்கள் ஆகியோர் ஆற்றிய உரைகளின் எழுத்துவடிவங்கள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன. கல்வி தொடர்பான மிகப்பெரிய சமுதாயக் கூட்டமைப்பின் குறிக்கோள்களையும், கருத்துகளையும் இது வெளிப்படுத்துகிறது.
http://www.campaignforeducation.org/

அனைவரையும் உள்ளடக்க சர்வதேச அமைப்பு:  கற்றலில் குறைபாடுகள் உள்ளவர்களால், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு நெட்வொர்க் இது.  வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிப்படை விஷயங்களைத் தீர்மானிக்கும்போது கற்றல் குறைபாடுகள் தொடர்பான விஷயங்களையும் அதில் இடம்பெறச் செய்வது குறித்து அறிக்கைகளும் பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
www.inclusion-international.org

No comments:

Post a Comment