Thursday 31 May 2012

கல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்


இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு :இந்த இணையதளத்தில், 2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சில புள்ளி விவரங்களின் பி.டி.எஃப் கோப்புகள், இந்திய வரைபடம், மாநிலங்களின் வரைபடங்கள், முக்கிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
 http://www.censusindia.net/

யுனெஸ்கோ புள்ளி விவர மையம் :  மழலைக் கல்வி, தொடக்கநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, அதையடுத்த கல்வி, கல்வி நிதி ஆகியன குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்தறிவு, பாலினப் பாகுபாடுகள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் போன்றவை குறித்து சுட்டிக்காட்டும் கல்வி அளவீடுகளும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.uis.unesco.org/ev.php?URL_ID=3753&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201 

யுனெஸ்கோ
எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கல்வி சம்பந்தப்பட்ட சர்வதேசப் புள்ளி விவரங்களை வழங்குகிறது. இதன் அறிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு ஓரளவுக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும்கூட, பயனுள்ளவையாக அமைந்துள்ளன.
http://www.ibe.unesco.org/

உலகளாவிய கல்வி தொடர்பான தகவல் தளம் :  தேடித் தெரிந்துகொள்ள ஏதுவான பல்வேறு நாடுகளின் தகவல் தளம். புள்ளி விவரங்களை ஆய்வு செய்வதற்கான அட்டவணைகளையும் வரைபடங்களையும் இது வழங்குகிறது.  பல்வேறு நாடுகளின் நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பளிக்கிறது.
http://qesdb.cdie.org/ged/index.html

No comments:

Post a Comment