கிராம மற்றும் நகர் புறங்களைச் சேர்ந்த பலர் இன்று கலை-அறிவியல் படிப்புகள், தொழில்நுட்ப படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் என்ற பல படிப்புக்களையும் தொலைநிலைக் கல்வி மூலம் படித்து பயனடைந்து வருகிறார்கள். தாங்கள் மேற்கொள்ளும் படிப்பின் எதிர்கால வாய்ப்புகள், அவற்றுக்கு இருக்க வேண்டிய அங்கீகாரம் போன்றவை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தொலைநிலைக் கல்வி பட்டப்படிப்பை இந்தியாவில் ஒரு குடிமகன் எந்த கல்வி நிறுவனத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அது குறித்த சில தகவல்கள்: கடந்த 2005, மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், தொலைதூரக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, வழங்கப்படும் அனைத்து தொழில்முறைசாரா படிப்புகளும், வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி பெறுவதற்கு தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்முறை சாரா பட்டங்களுக்கு மட்டும் என்பதை கவனிக்க வேண்டும். மருத்துவப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்க முடியாது. மற்ற தொழில்முறை படிப்புகளுக்கு ( MBA மற்றும் B.Ed), சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் அங்கீகாரம் இருக்க வேண்டும். B.Ed. படிப்பிற்கு கட்டாயம் NCTE அங்கீகாரம் இருக்க வேண்டும். எனவே, NCTE இணையதளத்தில், அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதையடுத்து B.Tech. படிப்பிற்கு அரசு உத்தரவை பொறுத்தவரை, தொலைநிலைக் கல்விமுறையிலான B.Tech. படிப்பிற்கு அங்கீகாரம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலை பல்கலைகளின் பட்டங்கள், பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைகளால் அங்கீகரிக்கப்படுகின்றன. உங்களுக்கு வெளிநாட்டு கல்லூரியில் படிக்கும் எண்ணம் இருந்தால், நீங்கள் சேர நினைக்கும் கல்வி நிறுவனம், இந்தியாவில் அங்கீகரித்திருக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சரிபார்க்கவும். மேலும், நீங்கள் இங்கே சேர விரும்பும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் பதிவாளரிடம் சென்று, அக்கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் பட்டமானது, வெளிநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை சரிபார்க்கலாம். |
கல்வித்திறன்,கல்வி செய்திகள்,என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம்?கல்வி மலர் tamil nadu collage,sathikkalam,
Saturday, 19 May 2012
தொலைநிலைப் படிப்பு: சில முக்கிய அம்சங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment