மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், அணுக்கரு தொடர்பான ஆய்வுகளில் தலைசிறந்த இந்திய மையம் ஆகும்.
ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் என்பது இயற்பியல் துறையின் ஒரு பிரிவாகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் ரேடியோ ஆக்டிவிட்டி, அணு, ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. மருத்துவத்துறையிலும் ரேடியேஷன் தெரபி, இதனுடன் தொடர்புடையதே.
பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், ரேடியாலஜிக்கல் துறையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 25 மாணவர்களில் ஐந்து பேர் புரவலர்(ஸ்பான்சர்) அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. முதுநிலை இயற்பியல் பட்டதாரிகள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், விண்ணப்பிக்கலாம்.
ஸ்பான்சராக தேர்வு செய்யப்படுபவர்கள் ரேடியோ தெரபி தொடர்பாக குறைந்தபட்சம் ஓராண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு http://www.barc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment