Saturday, 19 May 2012

கடல்சார்ந்த இளநிலைப் படிப்புகள்


Maritime என்பது கடலுடன் தொடர்புடைய செயல்பாடுகளைக் குறிக்கும். துறைமுகம், சரக்கு கையாளுதல்
போன்றவற்றை உள்ளடக்கியுள்ள கடல்சார் வணிகம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
Indian Maritime University இத்துறை சார்ந்து B.sc.,Nautical science, B.Tech Marine engineering, B.Sc., Martime Science, B.Tech Naval Architecture and ocean engineering உள்ளிட்ட படிப்புகளை வழங்குகிறது.

படிப்பை முடித்த மாணவர்கள் DRDO., இந்திய கப்பற்படை, கப்பல் சரக்குப் போக்குவரத்து, கப்பல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியலாம்.

மாணவர்கள் ஐ.ஐ.டி.,களால் நடத்தப்படும் இணை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ட் மேனேஜ்மென்ட், குஞ்சலி மார்க்கர் ஸ்கூல் ஆப் மரைன் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டிரெய்னிங் ஷிப் சாணக்யா போன்றவை இப்படிப்புகளை வழங்கும் வேறு கல்வி நிறுவனங்களாகும்.
மூன்று முதல் நான்கு ஆண்டு கால படிப்புக்கு பிளஸ் 2 வில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கில பாடங்களுடன் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கு http://www.imu.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment