சர்க்கரை உற்பத்தி தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட இப்படிப்பு
கைகொடுக்கிறது. சர்க்கரை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் தொழில்நுட்ப உதவி வழங்குவது பற்றிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆலைகள், கொதிகலன்கள், மின்நிலையம், நீராவிச் சமனிலை, உபரி மின்உற்பத்தி போன்ற துறைகள் சார்ந்து இத்தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது.
இப்படிப்பு முடித்தவர்கள், சர்க்கரை ஆலைகளில் உதவிப்பொறியாளர், உற்பத்திப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பாடப்புத்தக அறிவுடன், கள அறிவையும் மாணவர்கள் பெறுகின்றனர். தேசிய சர்க்கரை நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் இத்துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு அடிப்படையில் 25 மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர்.பான்-இந்தியா நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். படிப்புக்காலம் 18 மாதங்கள். பயிற்சிக் கட்டணமான 22 ஆயிரத்து 660 ரூபாயை இரு தவணைகளில் செலுத்தலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடக்ஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டெக்னாலஜி மற்றும் இணையான பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
மேலும் விவரங்களுக்குwww.nsi.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment