கடந்த சில வருடங்களாக சிங்கப்பூர் கல்வி உலகளவில் பிரபலமடைந்துள்ளதாலும், இந்தியாவிற்கு
அருகாமையில் உள்ளதாலும், பாதுகாப்பான நாடு என்று பெயர் பெற்றுள்ளதாலும், குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாலும், இந்திய மாணவர்கள் மத்தியில் சிங்கப்பூர் கல்விக்கு, குறிப்பாக பொறியியல் கல்விக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இந்நாட்டு பல்கலைகளில் சேர்க்கை விதிமுறைகள் எளிதானவை. மற்ற மேற்கு நாடுகளோடு ஒப்பிடுகையில், மாணவர் விசா பெறுவதற்கான தகுதித் தேர்வுகள் எளிமையானவை என்பதும் முக்கியமானது. ஒரு வருடத்திற்கான டியூஷன் கட்டணம் S$24,000 முதல் S$30,000 வரை ஆகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையும் கிடைக்கிறது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்(National university of Singapore), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(Nanyang technological university) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம்(Singapore management university) ஆகிய 3 உள்நாட்டுப் பல்கலைகளும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலவிதப் படிப்புகளை வழங்குகின்றன. மேலும், பல புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைகளும் இங்கே தமது வளாகங்களை வைத்துள்ளன. இந்நாட்டிலுள்ள பொறியியல் படிப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
சிங்கப்பூரின் பல்கலைகளில் பொறியியல் சேர்வதானது, முக்கியமாக, ஒரு மாணவரின் மதிப்பெண் தகுதியைப் பொறுத்தது. இந்நாட்டு பொறியியல் படிப்புகள் 4 வருட கால அளவினைக் கொண்டவை. ஒவ்வொரு பல்கலையும், விண்ணப்பம் சமர்ப்பித்தலுக்கான கடைசித் தேதியை வெவ்வேறாக வைத்திருந்தாலும், இறுதி முடிவை 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குப் பின்னரே மேற்கொள்கின்றன.
மிகுந்த சந்தோஷமாக மக்களின் படிப்பு இருக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்...
ReplyDelete