Saturday 19 May 2012

ஆட்டோமொபைல்


ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது.
நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது. போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு இப்படிப்பு உதவுகிறது.

மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால் ஆட்டோமொபைல் துறைகளில் எளிதில் பணிவாய்ப்புகளை பெறலாம். நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு துறையிலும் சேரலாம். இப்படிப்பில் சேருவதற்கு மெக்கானிக்கல், தயாரிப்பு அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில்  இப்படிப்புக்கு கல்விக்கட்டணம் வருடத்துக்கு ரூ.1.5 லட்சம். படிப்பை முடிப்பவர்கள் ஆரம்ப நிலை ஊதியமாக வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை பெறுகிறார்கள் என இக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்கே படிப்பது 


மகாராஷ்டிரா தொழில்நுட்ப கல்வி நிறு வனத்தில் இத்துறை சார்ந்த 6 மாதகால அளவு கொண்ட குறுகியகால முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment