பொறியியல் படிப்புகளைப் போல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் எம்.பி.பி.எஸ்-க்கு இல்லை. கட் ஆஃப் மதிப்பெண்கள் 195-க்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு அருகில் எடுப்பவர்கள் போட்டிகளை சமாளித்து தனியார் கல்லூரிகளில் இடம் பெறுவார்கள். மெரிட் தவிர, மேனேஜ்மென்ட் மூலம் ஸீட் பெறுபவர்களும் உண்டு.பல லட்சங்கள் வரை செல்லும் கட்டணங்கள், ஐந்து வருட படிப்பில் இறுதி வருடம் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி போன்றவை இதற்கான பொது விதிகள். மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம், கண் மருத்துவம் என வளமான எதிர்காலம் உண்டு என்பது கண்கூடு.''நமது நாட்டில் பல் மருத்துவர்களுக்கான முக்கியத் துவமும் தேவையும் அதிகமாகி வருகிறது'' என்று மத்திய சுகாகாரத்துறை அமைச்சர் அன்புமணிகூட சமீபத்தில் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பும் உலகளவில் பல் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முக்கியத்துவம் கொடுத்து, கிராமங்கள் வரை பல் மருத்துவ வசதியை எடுத்துச் செல்வது, இந்தத் துறையில் இன்னும் தேவையான விழிப்பு உணர்வைப் புகுத்துவது போன்ற திட்டங்களுக்கான ஆலோசனை களிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.படிப்பை முடித்த கையோடு வங்கியில் கடன் உதவி பெற்று, தேவையான இடவசதி, மருத்துவ உபகரணங்களுடன் கிளினிக்கை ஆரம்பித்து விடலாம். இதில் மேற்படிப்பான எம்.டி.எஸ் படித்தால், இன்னும் சிறப்பு.
எங்கு படிக்கலாம்
மீனாட்சியம்மாள் பல் மருத்துவக் கல்லூரி
முகவரி Alapakkam Main Road
Maduravoyal
chennai - 600 095.
தொலைபேசி 044 - 23782566, 23780177
No comments:
Post a Comment