Saturday, 19 May 2012

ஹோட்டல் மேனேஜ்மென்ட்



ஹோட்டல்களில், பி.ஆர்.ஓ., நிர்வாகம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு தரும் 'ஃப்ரன்ட் ஆபீஸ்' பாடப் பிரிவுகள்,பராமரிப்பில் வேலை வாய்ப்பு தரும் 'ஹவுஸ் கீப்பிங்' பாடப் பிரிவுகள், உணவு உற்பத்தியில் வேலை வாய்ப்பு தரும் 'குக் புரொடக்ஷன்' பாடப் பிரிவுகள்.. என இதன் பாடத் திட்டமே வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது ஹோட்டல், ரெஸ்ட்டாரன்ட், ஃபாஸ்ட் ஃபுட், காஃபி ஷாப், மோட்டல் என பல பெயர்களில் பெருகி வரும் இந்த முதல் தர உணவகங்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.


ப்ளஸ் டூ-வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மூன்று வருடங்கள், நான்கு வருடங்கள் என கால அளவு மாறுபடும். இந்தப் படிப்பில் செறிவான ஆங்கில அறிவோடு இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு என வேற்று மொழி அறிவும் இருந்தால் மிக அதிக சம்பளத்தில் வேலையில் அமர முடியும்.


குறிப்பாக, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் வெளிநாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தப் படுவார்கள்.


மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை, தரமணி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அரசால் நடத்தப்படும் 'ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்'கள் உள்ளன. இதற்கு 'ஆல்இண்டியா ஹோட்டல் மேனேஜ்மென்ட்'டால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


மற்ற தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்-களில் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்-பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சேலத்தில் உள்ள சேர்வராய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலிய பல கல்வி நிலையங்களில் இந்தப் பாடப்பிரிவு உள்ளது.

No comments:

Post a Comment