ஃபேஷன் டெக்னாலஜி படிப்புக்கு பன்னிரண்-டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப்
படித்திருக்க வேண்டும். இது கல்வி நிலையங்களைப் பொறுத்து மூன்று, நான்கு கால ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்களுக்கு இந்திய தொழில் துறைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜவுளித் துறையில் அதிக அளவுல் வேலை வாய்ப்புகள் உள்ளன. தவிரவும், இந்திய ஆடைகளுக்கு உலகளவில் இருக்கும் வரவேற்பால் இவர்களுக்கு ஏற்றுமதி துறையிலும் வரவேற்பு உள்ளது.
ஃபேஷன் டிசைனிங்கில் பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தைப் படித்தவர்களும் சேரலாம். இது இளங்கலை, டிப்ளமா படிப்பாக வழங்கப்படுகிறது. இதில் இமேஜ் கல்சல்ட்டன்ட், ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நிஃப்ட்' (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி), உலகளவில் ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்று. சென்னை, பெங்களூரு, குஜராத்தின் காந்திநகர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த கல்வி நிலையம் உள்ளது.
முக்கியமான விஷயம்.. இங்கெல்லாம் பொதுத் தேர்வு மதிப்பெண்களை விட அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெற்று அங்கு சேர்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
நிஃப்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் இயக்கும் 'நிஃப்ட் - டி.ஈ.ஏ.' கல்வி நிலையத்-திலும் ஃபேஷன் டிசைனிங் மூன்று ஆண்டுகளுக்கான டிப்ளமா கோர்ஸாக நடத்தப்படுகிறது.
நிஃப்ட் தவிரவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் வேறுபடும் என்பதால், அரசு அங்கீகாரம் பெற்ற தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
No comments:
Post a Comment