Saturday, 19 May 2012

இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு


வணிகவியல் தொடர்பான படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்-களிலும் இருக்கும் தேவையே இதற்குக் காரணம். பி.காம், பி.பி.ஏ., முடித்துவிட்டு உடனே வேலை தேடுவதைவிட, படிக்கும்போதே சி.ஏ. (சார்டர்டு அக்கவுன்டன்ட்), காஸ்ட் அக்கவுன்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரிஷிப் போன்ற வணிகவியல் தொடர்பான படிப்புகளைப் படிப்பது, வேலை வாய்ப்புகளை எளிதில் வசப்படுத்தும்.

இன்று இந்தப் படிப்புகளில் சேரும் பலரும், மேற்படிப்பாக எம்.பி.ஏ அல்லது எம்.சி.ஏ., படிக்கும் எண்ணத்தோடுதான் சேருகிறார்கள். அந்த கணிப்பு சரிதான். அதிலும் எம்.பி.ஏ.,வில் ரீடெயில் மேனேஜ்மென்ட், ஃபார்மா மேனேஜ் மென்ட், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட் ரேஷன் போன்ற சிறப்புப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும் போது, அதற்கான வேலை வாய்ப்பும் கூடுகிறது.

அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இந்தக் கல்விக்கு, அந்தந்தக் கல்வி நிலையங்-களுக்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பி.ஏ., ஆங்கிலம்: ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்குத்தான் இப்பொழுது பி.பி.ஓ (பிஸினஸ் பிராசஸ் அவுட்ஸோர்ஸிங்) துறையிலும், மொழிபெயர்ப்பு துறையிலும் வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. கூடவே, கைக்கடிகாரம் முதல் கணினி வரை மார்க்கெட்டில் விற்பனையாகும் பொருட்களை உபயோகிப்பது பற்றிய குறிப்புகள் அடங்கிய ‘பிரவுச்சர்’களுக்கு எழுத்தாக்கம் கொடுக்கவும் (டெக்னிகல் ரைட்டிங்), வெப் டிசைன் துறைகளில் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களின் தேவையே அதிகம் நாடப்படுகிறது.

எனவே நல்ல ஆங்கில அறிவு அமையப் பெற்றிருக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உள்ளது.

No comments:

Post a Comment