Friday 18 May 2012

மானுடவியல்(Anthropology)


இந்திய மக்களைப் புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப அவர்களை ஆட்சி
செய்யவும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகம்
செய்யப்பட்ட பாடப்பிரிவு மானுடவியல் (Anthropology).முதலில் கல்கத்தாவிலும் பின்னர் 1945 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் இப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பட்டயப் படிப்பாகவும் சான்றிதழ் படிப்பாகவும் மட்டுமே மானுடவியல் இருந்தது. 1975 இல் முதுநிலைப் பட்டப் படிப்பாக இது உயர்த்தப்பட்டது. முதுநிலைப் படிப்புடன், எம்ஃபில் மற்றும் பிஎச்டி படிப்புகளையும் நடத்துகிறது.

சமுதாய மானுடவியல், மானுடவியல் தொல்லாய்வு, பழங்குடியினப் பண்பாடு, மானுட உடற்கூறு, மானுடவியல் ஆய்வு முறைகள், பயன்முறை மானுடவியல், கிராமிய மற்றும் பழங்குடியினர் நலம் குறித்த பாடங்கள், இப்பிரிவில் கற்பிக்கப்படுகின்றன. அத்துடன் 2 ஆம் ஆண்டின்
இறுதியில், ஏதாவது ஒரு தமிழ்ப்பழங்குடியினர் வாழும் இடத்துக்குச் சென்றுகள ஆய்வு செய்து மானுடவியல் மாணவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்


மானுடவியல் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எங்கே படிக்கலாம்?
சென்னை, மதுரை,நெல்லை,திருச்சி மற்றும் சில பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு உள்ளது. இன்னும் சில பல்கலைக்கழகங்களில் அஞ்சல்
வழிக் கல்வியாகவும் உள்ளது.

வேலை வாய்ப்புகள்
மானுடவியல் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள், தமிழக அசுப்
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதி, உதவி ஆட்சியர்,
உதவி மாவட்டக் காவல் அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும். அத்துடன் குடிமைப்பணிகளில் தேர்ச்சி பெற்று, காவல்துறை அதிகாரிகளாகவும்,ஆட்சியராகவும் சுப் பணியில் அமமுடியும்.
சுப் பணியில் மட்டுமல்லாது,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணிகளையும் இப்பட்டம் பெற்ற மாணவர்கள் எளிதாகப் பெறுகின்றனர்.

No comments:

Post a Comment