Friday 18 May 2012

புள்ளியியல்


பொருளாதாரம் படித்து மேதை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போல புள்ளியியல் படிப்பில் ஆர்வம் உள்ள
மாணவர்களுக்கும் அற்புதமான
எதிர்காலம் உண்டு என்றால் நம்ப முடிகிறதா?பொருளாதாரப் பாடத்திற்கென்றே பித்யோகமான கல்வி நிலையங்களில் தமான படிப்புகளைத் தருவதைப் போல புள்ளியியல் படிப்பிற்கும் இந்திய
அளவில் மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் உண்டு. நமது பொருளாதார நிலைமைகள் குறித்து அறிந்து கொண்டு திட்டமிடுவதற்கும் புள்ளியியல் படிப்புகள் பேருதவியாக இருக்கின்றன. கணிதம்,வணிகவியல் பாடப்பிரிவுகளைப் படிக்கும் மாணவர்கள் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்ற புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாகப் படித்தாலும் கூட, அந்தப் பாடத்தையே   தனிப் பாடமாக இளநிலை பட்டமாக மட்டும் இல்லாமல் முதுநிலை ஏன்,
ராய்ச்சி படிப்பு வரை கூட இந்தப் பாடங்களைப் படித்து பெரும் புள்ளியாக
வலம் அலாம்.இந்தப் படிப்பு இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில பெரிய நிறுவனங்களில் மட்டும் நடத்தப்படுவதால்,இதில் சேர்வதற்கு எழுத்துத் தேர்வும்அதில் தேர்ச்சி பெற்ற பிறகு நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகின்றன.

கல்வித் தகுதிகள்
பி.ஸ்டாட் (ஆனர்ஸ்) கொல்கத்தா மையத்திலும், பி.மேத்., ஸ்டாட்
(ஆனர்ஸ்) பெங்களூரு மையத்திலும் மூன்றாண்டு படிப்புகளாகச்
சொல்லித்தப்படுகின்றன. இந்த இளநிலை பட்டப் படிப்புகளில் சே +2 இல் கணிதம் மற்றும் புள்ளியியல் தொடர்பான பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இந்த இளநிலைப் படிப்புகளை முடித்த மாணவர்கள் புள்ளியியல், கணிதம்,பொருளாதாரம் போன்ற படிப்புகளில் முதுநிலைப் பட்டங்களையும் தொடர்ந்துபடிக்கலாம். இந்த இந்தியன் ஸ்டாட்டிக்கல்
இன்ஸ்டிட்யூடில் ஏற்கனவே கூறியது போல் நுழைவுத் தேர்வும் சற்று தமிக்கதாகவே இருக்கும். ஆக மாணவர்கள், 12 ஆம் வகுப்பு கணிதம், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாடங்களில் மிகவும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பது மிகவும் அவசியம். நுழைவுத் தேர்வின் வெற்றிக்குப் பிறகு நேர்முகத்தேர்வும் உண்டு என்பதால் பாடங்களை நன்கு புரிந்து படிப்பவர்களாக இருப்பது அவசியம். மேற்கண்ட பாடங்களில் பெறப்படும் கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கை நிர்ணயம் செய்யப்படலாம்.

எங்கு படிக்கலாம்?
புள்ளியியல் படிப்பிற்கு நாட்டிலையே மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்வது
கொல்கத்தாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. (Indian
Statistical Insitute) 
என்னும் நிறுவனம்தான். 1959 ஆம் ஆண்டிலேயே இந்நிறுவனம் தேசிய அளவிலேயே புள்ளியியல் படிப்பிற்காக மிக முக்கியத்துவம் பெற்ற நிறுவனம் என்று அங்கீகாரம் பெற்றுள்ளது.

டெல்லியிலும், பெங்களூருவிலும் இதன் கிளை மையங்கள் செயல்படுவதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


வேலை வாய்ப்பு 


இந்தத் துறையில் பட்டப் படிப்புகளோடு நிறுத்தி விடுவதைக் காட்டிலும்,மாணவர்கள் முதுகலைப் படிப்புகளிலும் தொடர்ந்து படித்து முடித்தால் வேலை வாய்ப்பு அதிகம் உண்டு. புள்ளியியல் துறையை சேர்ந்தவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள்,இன்சுரன்ஸ் நிறுவனங்கள், உற்பத்தி தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதோடு சம்பளமும் அதிகமாக கிடைக்கும். புள்ளியியல் சார்ந்த ஆய்வுப் படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல மரியாதையும் வரவேற்பும் அதிகம் உண்டு. நீங்கள் ஆய்வுப் படிப்பில் ஆர்வம் மிகுந்தராக இருந்தால் இதே புள்ளியியல் துறையில் ஆய்வை
முடித்து நிச்சயம் சாதிக்க முடியும். இப்படிப்பு குறித்து மேலதிக விங்கள்
பெற விரும்பினால் http://isical.ac.in சொடுக்கிப் பாருங்களேன்.

No comments:

Post a Comment