Sunday 6 May 2012

சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) என்றால் என்ன ?




சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) என்பது ஒரு தனி நபரின் உணர்வு சார்ந்த நுண்ணறிவை குறிக்கும் சமூக வார்த்தையாகும்.


ஆளுமை திறன், சமூக நளினம், தகவல் தொடர்பு, மொழி திறமை, நேசம் , மக்கள் தொடர்பு,இனைந்து செயலாற்றும் மனபாங்கு, தலைமை தாங்கி வழி நடத்தும் திறன்கள், தட்டிகொடுத்து ஊழியர்களை ஊக்குவிக்கும் திறமை மற்றும் ஒரு நபரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் இவை அனைத்தின் கலவையின் ஒருங்கினைப்பு தான் சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) என்று கூறப்படும் தனி நபர் திறமையாகும்.

நாம் நமது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய உள்ளோம் அப்படிபணிபுரியும் தருனத்தில் நாம் நமது வேலையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்என்றால் சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) என்று நான் மேற்கூறிய அனைத்து தகுதிகளும்ஒன்றினைத்து நமக்கு தேவைபடுகின்றது இதனால் தான் பொறியியல் கல்லூரியாகஇருந்தாலும் சரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி அங்கு வளாகநேர்முக தேர்விற்க்கு(Campus Interview) வரும் அனைத்து நிறுவனங்களும் மாணவர்களிடம்இந்த சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) என்று கூறப்படும் உணர்வு சார்ந்த நுண்ணறிவைஎதிர்ப்பார்க்கின்றது.

எப்படி சாப்ட் ஸ்கில்ஸ் திறனை வளர்த்து கொள்வது ?

கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் படிக்கும் படங்களுடன் சேர்ந்து சாப்ட்ஸ்கில்ஸ்(Soft Skills) திறமைகளை வளர்த்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இன்றுசாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) மேம்பாட்டுக்கு உதவ எண்ணற்ற மனிதவள மேம்பாட்டுபயிற்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பரங்கிப்பேட்டை போண்ற ஊரகபகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இது போண்ற பயிற்ச்சிகள் நிச்சயமாக தேவை.

தானாக நமது செந்த முயற்சியில் சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills) திறனை வளர்த்துகொள்வதும் முடியாத காரியமில்லை.

உங்களது பாடத்தில் நீங்கள் பெற்று இருக்கும் திறன்களை போல இந்த சாப்ட் ஸ்கில்ஸ்(Soft Skills)  திறனும் மிக மிக முக்கியமாகும்.

உதாரனமாக உங்கள் மொழி திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் தினமும் ஆங்கில செய்தி தாள்களை வாங்கி படித்து அதில் நமக்கு புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அகராதியில்(Dictionary) தேடி கண்டரிந்து கற்று கொள்ள வேண்டும் கற்றுக் கொள்வதுடன் நிறுத்தி கொள்ளாமல் கற்ற வார்த்தைகளை பேசி பழக வேண்டும். நன்பர்களிடத்தில் கலந்துரையாடும் போழுது ஆங்கிலத்தில் பேசி பயிற்ச்சி பெற வேண்டும்.

எனக்கு ஆங்கிலம் வராது என்று கூறும் மாணவர்கள் கூட சினிமா கூத்தாடிகளின் ஒய் திஸ் கொலை வெறி??? என்ற அறை குறை ஆங்கில பாடலை தவறுகள் இல்லாமல் பாடுவதை நாம் பார்க்கின்றோம். இதை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் நாம் யாரும் அந்த பாடலை அமர்ந்து முயற்ச்சி எடுத்து மணப்பாடம் செய்வதி இல்லை ஆனாலும் கேட்ட விஷயங்கள் மீது சைத்தான் நமக்கு ஏற்ப்படுத்திய‌ ஆர்வத்தினால் பாடுகின்றோம் இந்த ஆர்வத்தை நாம் அங்கிலம் பேசுவதில் செலுத்தினேம் என்றால் மொழிதிறன் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல.

அதே போண்று தான் ஆளுமை திறனும் பள்ளி கல்லூரிகளில் நாம் வகுப்புகளில் நமது நன்பர்களை வழிநடத்தி நமக்கு தெரிந்த விஷயங்களை அவர்களுக்கு கற்று கொடுத்து நம்மிடம் உள்ள திறமைகளை அவர்களிடம் பகிர்ந்து அவர்களை வழி நடத்தி வந்தால் இந்த ஆளுமை திறன் என்பது ஒரு மாணவனிடத்தில் தானாக வளரும்.

ஒரு மாணவன் தனது குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவனுக்கு படிப்பறிவு மட்டும் போதாது அவன் உணர்வு சார்ந்த நுண்ணறிவை வளர்த்து திறமையுடன் செயல்படுவதன் மூலம் தான் அவன் படித்த படிப்பிற்க்கு கூட ஒரு மதிப்பு கூட்டப்பட்ட மரியாதை ஏற்ப்படுகின்றது என்பதை உணர்ந்து திறமைகளை வளர்த்து கொள்ள‌ வேண்டும்.

ஒவ்வொருவரின் எண்ணத்தை பொருத்தே செயல்பாடுகள் அமைந்திருக்கு என்ற நபி மொழிக்கு ஏற்ப நமது எண்ணத்தை நல காரியங்களின் பக்கமும் வெற்றியின் பக்கமும் திருப்பினால் செயல்பாடும் அதை நோக்கி செல்லும் என்பபதை கூறிக் கொள்கின்றேன்

No comments:

Post a Comment